அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது. சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உங்களுக்காக எட்டு டிப்ஸ்கள்…

* வெதுவெதுப்பான நீரில் 'ஷவர்பாத்' குளியல் போடுவது நல்லது. அப்போது, உடலின் மேற்புறத்தோலில் காணப்படும் நுண்ணிய துவாரங்களில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்குகின்றன.

* மனஅழுத்தமும் சருமத்தைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க யோகா, பிராணயாமம் போன்ற பயிற்சிகள் செய்வது நல்லது. மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக காபி, மதுபானங்கள் போன்றவற்றை அருந்தக்கூடாது.

* குளிக்கும்போது அழுக்கை நீக்கும் தரமான, வீரியம் குறைந்த சோப்பை உபயோகிக்க வேண்டும். தரமான சோப்பு கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களை சிதைத்து சருமத்திற்கு கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது.

* கொழுப்புச்சத்தே இல்லாத உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. இது சருமம் வெளிறிப்போவதற்கு காரணமாகி விடுகிறது. அதனால், போதுமான அளவிற்கு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் தோல் ஈரப்பதமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். மீன், முட்டை மற்றும் அவரை, மொச்சை போன்ற நார்ச்சத்துள்ள தானியங்கள், வேர்க்கடலை, பச்சைக் காய்கறிகள் போன்றவை சருமத்துக்குத் தேவையான சத்தான உணவுப் பொருட்களாகும்.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது தோலில் சுருக்கங்களும், இடுப்பளவு விரிவடைந்தும் விடுகிறது. அதனால், புரதச்சத்துக்கள் நிறைந்த கடலை மற்றும் தானியங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும்.

* பெரும்பாலானவர்கள் கழுத்தின் அழகில் கவனம் செலுத்துவது இல்லை. அதனால், கழுத்தின் பின்பகுதியில் அதிகப்படியான அழுக்கு தேங்கி விடுகிறது. கழுத்தை அழகாக்க, முகத்திற்கு போடும் 'ஆன்டியாக்சிடண்ட் சீரம்' உள்ள கிரீமை பயன்படுத்தலாம். இது, சூரியஒளி படும்போது தோல் கறுப்பு நிறமாக மாறிவிடாமல் பாதுகாக்கிறது.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மது, முகத்தில் உள்ள மெல்லிய ரத்தநாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. சருமத்திற்கு சிறந்த ஆன்டியாக்சிடண்ட் ஆக பணிபுரியும் வைட்டமின் 'ஏ' சத்தை தோலில் இருந்து உறிஞ்சுகிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் உண்டாகின்றன. இதைத் தவிர்க்க தினமும் 6 முதல் 8 டம்ளர் வரை நீர் அருந்துவது நல்லது.

* சருமம் இரவில் தான் புத்துணர்ச்சி அடைகிறது. அதனால் தினமும் கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு சீராக நடைபெறும்.

அழகு குறிப்பு, அழகு குறிப்புகள், அழகு குறிப்புக்கள், அழகு குறிப்புகள

One response to “அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...