தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இரண்டு நாள் பயணமாக ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில்ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் சட்டமன்றத் தொகுதியின் கேசர்பள்ளிக்கு சென்றிருந்த திரு சவுகான், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் தெலங்கானாவின் மீனவலு, பெத்தகோபாவரம், மன்னூர், கட்லேரு ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை விமானம் மூலம் அமைச்சர் ஆய்வு செய்தார். கம்மம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் விவாதித்தார். உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று திரு சவுகன் அவர்களிடம் கூறினார்.

“உங்கள் வலியைப் புரிந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்னை அனுப்பியுள்ளார், நீங்கள் உங்கள் பயிர்களை இழந்துவிட்டீர்கள், ஆனால் அவர் உங்கள் உயிரை இழக்க அவர் விட மாட்டார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், எனது விவசாய சகோதரரின் வலியை என்னால் உணர முடிகிறது. நாங்கள் தகுந்த இழப்பீடு வழங்குவோம் என்று திரு சவுகான் தெரிவித்தார். நெருக்கடி காலங்களில் விவசாயிகளிடமிருந்து கடன்களை வசூலிக்க வேண்டாம் எனறு வங்கிகளை கேட்போம். அடுத்த பயிருக்கான உரங்கள் மற்றும் விதைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையை இயல்பாக்க மாநில அரசுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அக்கறை கொண்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய அரசின் பங்கையும் உள்ளடக்கிய மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.3,448 கோடி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...