சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கும் நிலையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 187 நாடுகளைசேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழகஅரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம்முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,” நாளை, ஜூலை 28 மற்றும் நாளை மறுநாள் குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளேன்.
குஜராத்தில் மதியம் சபர் பால்பண்ணையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறேன். பலஆண்டுகளாக, குஜராத்தில் கூட்டுறவு மற்றும் பால்துறையை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சபார் பால் பண்ணையில், தூள் ஆலை மற்றும் அசெப்டிக் பால் பேக்கேஜிங் ஆலை திறக்கப்படும். சபார் சீஸ் மற்றும் மோர் உலர்த்தும் ஆலைதிட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒருசிறப்பான போட்டியாகும்.” என கூறியுள்ளார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |