இறந்தவரின் சடலம் மீது அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு கேள்விகள் :

நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் அவசர மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) மசோதா, 2016 மக்களவையில் 19 ஜூலை 2016 அன்று விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்படுகிறது. மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விடுகின்றனர். தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர்கள் யாரும் மக்களவை உறுப்பினர்களாக இல்லாததால் தங்களது கருத்தை சொல்ல வாய்ப்பில்லை.

ஆனால், மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மாநிலங்களவையில் 1 ஆகஸ்டு 2016 அன்று விவாதித்திற்கு வந்த போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்?

1. மூன்று உறுப்பினர்களில் மூத்த உறுப்பினரான திருச்சி சிவா அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டாரா? இல்லையா? (அதே தினம் காலை 11.00 மணிக்கு தான் அதே மாநிலங்களவையில் திருமதி. சசிகலா புஷ்பா தன்னை முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தாக்கியதாக குற்றம் சுமத்தியதையும் அதற்கான காரணம் திருச்சி சிவாவுடனான விமான நிலைய நிகழ்வு என்பதையும் நினைவில் கொள்ளவும்).

2. தி.மு.க.வின் மற்றொரு உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு குறுக்கீடு செய்ய முற்பட்டாலும், மசோதாவிற்கு சம்பந்தமில்லாமல் பேச முயன்றதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது. இருந்த போதிலும் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க முயற்சி செய்யாமல் அமர்ந்து விடுகிறார். ஏன் தனது தரப்பு வாதத்தை முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை? Point of order ஏன் கொண்டு வரவில்லை?

3. அடுத்து மசோதா மீது பேசிய திருமதி. கனிமொழி கூறியதைப் பார்ப்போம் :

"There are a lot of problems with these medical colleges. We don't have enough medical colleges and there is a problem of capitation and management fee and it is very high."

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவரே கொடுத்துள்ளார். இதை அவர் மறுப்பாரா?

4. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை? (அ.தி.மு.க.வினர் வெளிறடப்பு செய்தனர்).

5. குரல் வாக்கெடுப்புக்கு எதிராக Division ஏன் கோரவில்லை?

6. Division கோரியிருந்தால் தங்களது எதிர்ப்பை சட்ட மசோதாவுக்கு எதிராக பதிவு செய்ய இயலும் என்ற விதி இவர்களுக்கு தெரியாதா?

பாராளுமன்றத்தின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளின்போது கை கட்டி, வாய் பொத்தி மெளனம் சாதித்து விட்டு இன்று சகோதரி அனிதாவின் இறப்பை அரசியலாக்க முற்படுபவர்களின் உண்மை நிறத்தை போராட்டம் நடத்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் உண்மை ஓங்குக |.

நன்றி ; ஆசிர்வாதம் ஆசாரி

One response to “இறந்தவரின் சடலம் மீது அரசியல் செய்யும் தி.மு.க.வினருக்கு கேள்விகள் :”

  1. செ.சுகுமாா் says:

    மாநில பாடத்திட்டத்தில் படித்தவா்களை மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் தோ;வை எழுதச் சொல்வது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு மாணவி அனிதா பலியாகியுள்ளாா். இப் பெண்ணின் அவசர முடிவு என்றாலும் மத்திய அரசு குறைந்தது 4 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளித்து மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...