வக்ப் ராஜ்யசபாவில், 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின் நேற்று முன்தினம் நள்ளிரவு நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த மசோதாவுக்கு, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.
முஸ்லிம்கள் தானமாக வழங்கும் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்ப் வாரிய சட்டங்களில், பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப் திருத்த மசோதா – 2025 லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேறியது.
லோக்சபாவில் கடந்த, 2ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 13 மணி நேர விவாதத்துக்குப் பின் ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக, 288 ஓட்டுகளும், எதிர்ப்பாக 232 ஓட்டுகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் நடந்த 17 மணி நேர காரசார விவாதத்துக்குப் பின், 128 ஆதரவு ஓட்டுகளுடன் மசோதா நிறைவேறியது. 95 பேர் எதிர்த்து ஓட்டுபோட்டனர்.
இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வக்ப் திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நம் அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் உறுதியாக எதிர்ப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |