குஜராத்மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறைந்தது 50 இடங்களில் பிரச்சாரம்செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குஜராத்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சியை தட்டிப்பறிக்க காங்கிரஸ மல்லுக்கட்டி வருகிறது.
கடந்த ஐந்துதேர்தல்களில் வென்றுள்ள பாஜக சாதனைகளை கூறி பிரச்சாரம்செய்து 6வது முறை ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறது.
இதற்காக, 182 தொகுதிகளில் குறைந்தது 150 தொகுதிகளைக் கைப்பற்றும் இலக்கை நிர்ணயித் துள்ளார்கள்.
இந்நிலையில், அடுத்தமாதம் 10ம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி தினமும் குஜராத்சென்று பிரச்சாரம்செய்ய செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் மூன்று அல்லது நான்கு இடங்களில் பிரச்சாரம்செய்யும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. குறைந்தது 50 இடங்களிலும் அதிக பட்சம் 70 இடங்களிலும் மோடி பேசவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.