மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ்

சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றிபெற்றது.

இந்தவெற்றியில் பாஜக மிக முக்கியபங்கு வகித்தது. 149 இடங்களில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 132 இடங்களில் வெற்றிபெற்றனர், அதாவது கிட்டதட்ட 90 சதவீத பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் பின்னணியில், தற்போதைய ‘மகாயுதி’ அரசின் மகளிர் உதவித் தொகை திட்டம், மாநிலத்தில் விவசாயிகளுக்கான மானியம் தவிர, வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப் படுகிறது.

ஆனால் இந்தவெற்றியின் பின்னணியில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பங்கையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி, அதன் நட்சத்திர பிரசாரகர்களில் ஒருவரான உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை களமிறக்கியது, மேலும் அவர் ‘நாம்பிளவுபட்டால், வீழ்வோம்’ என்ற சர்ச்சைக்குரிய முழக்கத்தையும் கொடுத்தார்.

இந்த முழக்கங்களுடன் கூடிய சுவரொட்டிகள் மும்பையிலும் வேறுசில நகரங்களிலும் ஒரே இரவில் ஒட்டப்பட்டன, மேலும் மாநிலத்தின் காங்கிரஸ் உட்பட பல எதிர்க் கட்சிகள் இதை ‘வகுப்புவாத சிந்தனை மற்றும் மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய’ நடவடிக்கை என்று குறிப்பிட்டன.

இந்த முழக்கம் சர்ச்சையாகி மூன்று நாட்களுக்குப் பிறகு, நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க தலைமையகத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டது.

அங்கு எடுக்கப்பட்ட முடிவு தெளிவாக இருந்தது. மகாராஷ்டிராவில் பாஜக எந்த வகையிலும் ஆட்சியைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு.

இதுகுறித்து பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, “சில அரசியல் சக்திகள், சாதி மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் இந்துக்களை பிரிக்கமுயற்சி செய்வார்கள். நாம் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும்போதாது, அதை எதிர்த்து போராடவும் வேண்டும். என்ன நடந்தாலும் நாம் பிரிந்துவிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.

‘ஒன்றிணைந்தால் பாதுகாப்பு’ என்ற புதிய முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்தார் இந்தச் செய்தி பாஜக-வையும் எட்டியிருக்கலாம். ‘ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ என்ற புதிய முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்தார்.

சில அரசியல் ஆய்வாளர்கள் இதை யோகி ஆதித்யநாத்தின் முழக்கத்துடன் ஒப்பிட்டு, மோதியின் முழக்கம் அதிகதாக்கத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் ‘லோக் ஜாக்ரன் மஞ்ச்’ மற்றும் ‘பிரபோதன் மஞ்ச்’ ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு, வீடு வீடாகச் சென்று, ‘ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ என்ற முழக்கத்தின் அர்த்தத்தை விளக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது.

‘பிசினஸ் வேர்ல்ட்’ இதழ் மற்றும் ‘தி இந்து’ செய்தித்தாளில் கட்டுரைகளை எழுதும் அரசியல் ஆய்வாளர் நினாத் ஷெத், “ஒரு முழக்கம் மத அடிப்படையில் இருந்தது, மற்றொன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டது. அந்த முழக்கங்களின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டர்.”

“ஆனால் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கும் சாதாரண வாக்காளர்களை இந்த முழக்கங்கள் சென்றடைந்துள்ளதாகத் தெரிகிறது.” என்று கூறினார்.இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத்தேர்தலில், மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ 17 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

“மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, பிறபெரிய மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது”என்கிறார் அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகை யாளருமான வீர் சங்வி பாஜக இதை நன்கு அறிந்திருந்தது, ஏனெனில் இந்தத்தேர்தலில் அக்கட்சி ஆர்எஸ்எஸ்-ஐச் சார்ந்திருப்பதை மீண்டும் வலியுறுத்திய தோடு மட்டுமல்லாமல், தேர்தலுடன் தொடர்புடைய தலைமை குழுவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மகாராஷ்டிரா துணை முதல்வரும் மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தேர்தலுக்கு முன்பு, “வாக்கு ஜிகாதிகள் மற்றும் அராஜகவாதிகளை எதிர்த்துப்போராட நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை பெற்றுள்ளோம்” என்று கூறியிருந்தார்.

அவருடைய தந்தை கங்காதர் பட்னாவிஸ் ஒருதன்னார்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமேலவை உறுப்பினராகவும் (MLC) இருந்தவர். முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான நிதின்கட்கரி, கங்காதரை தனது ‘அரசியல் குரு’ என்று விவரித்துள்ளார்.

ஹரியாணாவில் செய்தது போலவே மகாராஷ்டிரா தேர்தலிலும் பாஜக ஒரு விஷயத்தை செய்தது. ஹரியாணாவில் தேர்தல் பொறுப்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இருந்து வந்த தர்மேந்திர பிரதானிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல மகாராஷ்டிராவின் தேர்தல் பொறுப்பு, பூபேந்திர யாதவ் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பெயர் வெளியிட விரும்பாத பாஜக மூத்த தலைவர் ஒருவர், “வைஷ்ணவ் போன்றவர்களுக்கு மகாராஷ்டிரா போன்ற ஒருவளமான மற்றும் மிகப் பெரிய மாநிலத்தில் பிரசாரங்களை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு உள்ளது” என்று கூறுகிறார்.

தொடர்ந்துபேசிய அந்த பாஜக தலைவர், “பூபேந்திர யாதவ் ஒருவழக்கறிஞர், ‘ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்கள் பிரிவு’ என அழைக்கப்படும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். பூபேந்திர யாதவுக்கு முதல்முறையாக பாஜக அமைப்பிற்குள் ஒருபதவியை வழங்கியவர் நிதின்கட்கரி தான் என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.”

“நிதின்கட்கரி பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில், 2010-ஆம் ஆண்டு பூபேந்திர யாதவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.” என்று கூறினார்.

இதுதவிர, ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் முன்னாள் மேற்கு பிராந்திய தலைவர் அதுல் லிமாயேவிடம், பாஜக தலைவர்கள் பிஎல் சந்தோஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டது. அதாவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஒருங்கிணைபாளராக செயல்பட அவரிடம் கோரப்பட்டது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவரும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகவும் நெருக்கமானவருமான நிதின்கட்கரியின் வீட்டுக்குச் சென்று தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால், 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில், நிதின் கட்கரிக்கு குறைவான பொறுப்புகளே வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை மகாராஷ்டிராவில் அவரின் தேவை மிக அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் அவர் 70க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளை நடத்தினார்.

“பாஜகவுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கும் வகையில், எல்லோரும் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்பதே மூத்த ஆர்எஸ்எஸ்-பாஜக வாக்காளருக்கான செய்தியாக இருந்தது” என்கிறார் ‘தி ஹிட்டாவாடா’ நாளிதழின் அரசியல் நிருபர் விகாஸ் வைத்யா.

 

2024 மக்களவைத் தேர்தலில் ‘அப்கி பார் 400 பார்’ (இந்த முறை 400 ஐ தாண்ட வேண்டும்) என்ற பாஜகவின் முழக்கம், “அதன் வாக்காளர்கள் அனைவரையும், வாக்களிக்கக் கூட தங்கள் வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு ஒரு அதீத நம்பிக்கை நிலைக்கு கொண்டு சென்றது”.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இதை மனதில் கொண்டே, மாநிலத்தின் சிறிய மற்றும் பெரிய நகரங்களில் தங்களது கிளைகள் மூலம், கடந்த 4 மாதங்களாக வீடு வீடாக பிரசாரம்செய்தது. பாஜக ‘அரசின் நிரந்தர வளர்ச்சி’ என்ற செய்தியை மக்களிடம் எடுத்துரைக்க உதவியது.

ஆர்எஸ்எஸ் தனது ‘ஆர்கனைஸர்’ இதழில், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ‘சுமாரான செயல் திறனைக்’ குறிப்பிட்டு, இந்தத் தேர்தலில் அதை கடந்துவந்ததற்காக வாழ்த்தியது.

மேலும், “சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடுவது, விவசாயிகளின் நலன்களைப்பற்றி பேசுவது மற்றும் மகளிர் உதவித் தொகை திட்டம் போன்றவை இந்தத் தேர்தலில் பெரும் உதவிபுரிந்தது” என்றும் ஆர்எஸ்எஸ் அந்த இதழில் தெரிவித்துள்ளது.

நகர்ப்புற மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் மீது மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியதன் விளைவாக, இந்தத்தேர்தலில் 1995க்குப் பிறகு அதிகபட்சமாக 66.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

‘தி எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்காக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றிய செய்திகளை வழங்கும் மூத்த பத்திரிக்கையாளர் ராகேஷ் மோகன் சதுர்வேதி கூறுகையில், “இம்முறை ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகர்ப்புற வாக்காளர்கள் மீதானகவனம் என்பது, 2014 பொதுத் தேர்தலில் பார்த்ததைப் போலவே இருந்தது.” என்கிறார்.

“இந்த வகையான நேருக்கு நேர் பிரசாரத்தில், கொடி, பதாகை அல்லது ஒலிபெருக்கியுடன் யாரையும் நீங்கள் பார்க்க முடியாது. பெரும்பாலும் உங்கள் வட்டாரத்திலிருந்தோ அல்லது வாக்குச்சாவடிக்கு அருகிலோ யாராவது ஒருவர் உங்களை அடிக்கடி சந்தித்து, சகஜமாக பேசுவது போல, மிகவும் மென்மையாக தனது கருத்தை உங்களிடம் சொல்வார். அவ்வளவுதான்” என்கிறார் ராகேஷ்.

“ஆனால் இத்தகைய பிரசாரத்தின் சிறப்பு என்னவென்றால், இவை சாதி, மதம் அல்லது வர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை. பாஜக வெற்றிபெற்ற விதம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று கூறுகிறார் ராகேஷ்.

இந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தில் பாஜகவின் செயல்திறனால் ஏமாற்றமடைந்த ஆர்எஸ்எஸ் தலைமை இந்தமுறை பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டது.

நாக்பூரில் உள்ள ‘தி ஹிட்டாவாடா’ செய்தித்தாளின் அரசியல் நிருபர் விகாஸ்வைத்யா கூறுகையில், “நீண்ட காலத்திற்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இது போன்ற நுண்ணிய திட்டமிடலை நான் பார்த்தேன். இதன்கீழ் மாநிலத்திற்கு வெளியே இருந்து, சுமார் 30 ஆயிரம் பேர்வரை தேர்தல் பணிகளுக்காக பல்வேறு சமயங்களில் அழைக்கப் பட்டனர்.” என்கிறார்.

உண்மையில், கடந்த மக்களவைத் தேர்தலில் சராசரி செயல்திறனுக்குப் பிறகு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத் திலும் ஆர்எஸ்எஸ் ஒருகுழுவை அமைத்தது. அது மாநிலத்தின் மகாயுதி அரசாங்கத்தில் இன்னும் என்ன மேம் பாடுகளைச் செய்யமுடியும் என்பதைக் கண்டறிய மக்களைச் சந்தித்தது.

இப்பணிக்காக நாட்டின் பலமாநிலங்களில் இருந்தும் ஆண்களும் பெண்களும் அடங்கிய குழுக்கள் அழைக்கப்பட்டனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் வடமாநிலங்களில் மட்டுமல்லாது, தெலங்கானா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆட்கள் வரவழைக்கபட்டனர்.

“இவர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரஸ் அல்லது வேறு எந்தகட்சியும் ஆட்சியில் உள்ள பிற மாநிலங்களில், அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பாஜக உறுதி பூண்டுள்ளது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மகளிர் உதவித் தொகை திட்டம்’ மூலம் வரும்பணம் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்” என்கிறார் விகாஸ் வைத்யா

“இந்த பிரசார திட்டத்தின் கீழ், வாக்காளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். பாரம்பரிய பாஜக வாக்காளர்கள் ‘ஏ’ பிரிவில் வைக்கப்பட்டனர், ஆனால் ‘பி’ மற்றும் ‘சி’ வகைகளில் உறுதியான பாஜக ஆதரவாளர்களாக இல்லாத மக்களை குறிவைத்தனர்.”

“ராமர் கோயில் கட்டியது யார், எந்த அரசு பாபா சாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது என்பது போன்ற பாணியிலேயே பிரசாரம் நடந்தது.” என்று கூறுகிறார் நாக்பூரில் உள்ள மூத்த பத்திரிகையாளர் பாக்யஸ்ரீ ரவுத்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க ...

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக்கொள்ளாது – வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் ''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து எடை போட்டது காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி ''காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை அதன் ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் க ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 'ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அ ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அஞ்சாது – அண்ணாமலை பேச்சு 'தி.மு.க., அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்கு தொடருவோம் ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த ம ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...