நாட்டில் ஹிந்து மதத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் தான், ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற கருத் தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:
நமது நாட்டில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருப்பதற்கு, ஹிந்துமதத்தினர் பெரும்பான்மையாக இருப்பதே காரணமாகும். பெரும்பான்மை சமூகத்தினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை எப்போது குறையத்தொடங்குகிறதோ, அப்போது நாட்டிலுள்ள ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆபத்துஏற்படும்.
உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 54 மாவட்டங்களிலும், மேலும் சிலமாநிலங்களிலும் ஹிந்து மதத்தினரின் மக்கள் தொகை ஏற்கெனவே குறைந்து விட்டது. இந்த 54 மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகை தான் ஹிந்துக்களை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
மதம் சார்ந்த மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்தமாற்றமானது, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாகும். அனைத்து மதத்தினருக்கும் குடும்பக்கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார் கிரிராஜ் சிங்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.