”இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.
அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் சரித்திரம், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெரியுமா? கடந்த, 1926ம் ஆண்டு இதே பிரச்னை வந்தபோது, அங்கிருந்த சப்- ஜட்ஜ் அளித்த தீர்ப்பில், ‘திருப்பரங்குன்றம் கோவில், எந்த சந்தேகமுமின்றி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது; நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை’ என, தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
அந்த வழக்கில் அப்பீலுக்கு சென்றபோது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள், ஹிந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை, தி.மு.க., கொடுக்க தயாராக இருக்கிறது. புதிதாக இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்னையை ஆரம்பிக்கின்றனர். ஆடு எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர்.
நள்ளிரவில் கைது
ஒரு எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்கிய லட்சணத்தை பார்த்தோம்.
பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல் துறையை, பா.ஜ.,வினரை, 350 இடங்களில் நள்ளிரவில் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ., தலைவர்களை, வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில், மக்கள் எழுச்சியோடு வந்துள்ளனர். காவி வேட்டி கட்டிக்கொண்டு முருக பக்தன், சிவபக்தன் என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. சனாதன தர்மம், ஹிந்து தர்மம் வேறு இல்லை.
இஸ்லாமியர்கள் சகோதரர்கள் தான். பிரச்னையை ஏற்படுத்தியது யார்? இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, ‘சீன்’ போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அடக்கிக் காட்டுவோம்.
அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.
அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |