குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் 1 டீஸ்பூன்; கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு 1 வயது வரை இந்த எண்ணையைத்தான் தேய்க்கணும். ஆனால் இந்த எண்ணை நல்லாப் போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பாட்டணும். இப்படிச்செய்து வந்தால்; குழந்தைக்கு உடம்பில் சொறி. சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டுப்போல் இருக்கும்.

பொதுவா குழந்தைக்கு நாலு வயசாகறவரை தலைக்கு தேங்காயெண்ணை தேய்ச்சுக் குளிப்பாட்டறதுதான் உசிதம். நல்லெண்ணை குளியல் வேண்டாம். முன்னெல்லாம் ஃப்ரெஷ்ஷா தேங்காய்ப்பால் எடுத்து காய்ச்சி எண்ணை எடுத்து குழந்தைக்கு தேய்ச்சுக் குளிப்பாட்டுவோம். இப்பவும் கேரளாவுல அப்படித்தான் செய்யறாங்க. அதான் குழந்தையில் இருந்தே அவங்க சருமமும் தலைமுடியும் பட்டுப்போல இருக்கு.

ஆனா..இந்தக் காலத்துல உடனுக்குடன் எண்ணை எடுக்குறதெல்லாம் நடக்கிற காரியமா? அதுக்குப் பதிலா நல்ல தேங்காயெண்னை ரெண்டு கரண்டி அளவுக்கு எடுத்து. சுட வெச்சு அதுல கால் கரண்டி தேங்காய்ப்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா. தேங்காய்ப்பால் சடசடங்கற கத்தத்தோட முறிஞ்சு ஃப்ரெஷ் தேங்காயெணிணையா கமகமனு மணக்கும். இதை குழந்தையோட தலை. உடம்புனு முழுக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைப்பசை போக சீயக்காயெல்லாம் போடக்கூடாது.

பாசிப்பயறு அல்லது கடலை மாவு தேய்ச்சுக் குளிப்பாட்டினாலே எண்ணைப்பசை போய்டும். இப்பிடி குளிக்க வெச்சா. குழந்தைக்கு கரப்பான். சொரி சிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கத்துலயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலே ஒரு கொத்து வேப்பிலை போட்டு சூரிய வெப்பத்துலே வெச்சு சூடேரினதும் அந்தத் தண்ணியிலே குளிப்பாட்டினா. இன்னும் நல்லது.

Tags; குழந்தையின் சருமம் வளவளப்பாக, குழந்தை அழகாக இருக்க  , குழந்தையின் தோல் மினு மினுக்க,   பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...