பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற பாஜக ரயில்வே தொழிற்சங்க கூட்டத்தில், இது குறித்து அவர் பேசியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கோழைத் தனமான முறையில் தாக்குதல் நடத்தி, நமது வீரர்கள் 17 பேரைக்கொன்றது. இது குறித்து எங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கர வாதிகளை இந்திய ராணுவம் கொன்றது.
இதன்மூலம், எதிரிகள் மீது நமது மண்ணில் மட்டுமல்லாமல், அவர்களது நாட்டுக்குள் சென்றும் தாக்குதல் நடத்தமுடியும் என்ற உறுதியான செய்தியை உலகுக்கு இந்தியா தனது துல்லியத்தாக்குதல் மூலம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடு என்ற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா தனதுசக்தியை மேலும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் தனதுபோக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா ஒரு போதும் பிற நாடுகளிடம் மண்டியிடாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இதை சர்வதேச பொருளாதார ஆய்வறிஞர்களும், நிபுணர்களும் ஒப்பு கொண்டுள்ளனர் என்றார் ராஜ்நாத்சிங்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.