பாகிஸ்தானில் மதரஸா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது காலணிவீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
லாகூரில் முப்தி முகமது உசேன் நயீமி என்ற மதகுருவின் நினைவு நாள் நிகழ்ச்சி அங்குள்ள மதரஸா ஒன்றில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொண்டார்.
அவர் பேசுவதற்கு மேடையேறிய பொழுது அவரைநோக்கி பார்வையாளர்களில் ஒருவர் காலணியை வீசினார். இதனால் ஷெரீப் கடும் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த விழா ஏற்பாட்டாளர்கள் காலணிவீசிய நபரை பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். அவர் உடனடியாக காவல்துறைவசம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இந்த சம்பத்திற்குப் பிறகும் நிகழ்ச்சியில் திட்டமிட்டபடி, நவாஸ்ஷெரீப் பேசினார். ஆனால் அவர் தனது பேச்சில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி என்றுமட்டும் சுருக்கமாக கூறி, பிரார்த்தனை செய்துவிட்டு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்புநிலவியது. இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் அரசியல்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.