பிரதமர் நரேந்திர மோடி, கலிபோர் னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் பேசினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''வெளிநாடுவாழ் இந்தியர்கள் எப்போதும் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உலகம் முழுவதும் காணப்படும் மதிப்பைவைத்து அவர்களது முயற்சிகளை எடைபோடலாம். தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து குடும்பத்தின ரையாவது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒரேபாரதம், சிறந்தபாரதம் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற புதியவழியை ஏற்படுத்தும்.
இதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம்கிடைக்கும். மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்கலாம். வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டங்கள் இந்தியாவில் தொடங்கும். இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரில் பிரம்மாண்டமான ஒற்றுமை சிலை நர்மதை நதியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அந்தப் பணிகள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்ததும் உலகின் மிக உயரமான சிலையாக அது இருக்கும்.
இந்தியா தற்போது உலகின் ஒளிரும் நட்சத்திரமாக காணப் படுகிறது. இந்தியா தற்போது விரைவான பொருளாதார வளர்ச்சி, நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. ஜி.எஸ்.டி, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை போன்ற முன்முயற்சிகள் மக்கள் நேர்மையுடன் தொழில் நடத்துவதற்கு உதவி உள்ளது. இந்த முன்முயற்சிகள் காரணமாக எளிதாக தொழில்புரியும் நாடுகளின் கடந்த நான்காண்டு பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது. எனவே,புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் பாடுபடவேண்டும்'' என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.