எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

 இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை கோழையகற்றியாகவும் பசியுண்டாக்கியாகவும் பால் புண் உண்டாகும் தன்மையுடையதாகவும் செயல்படுகிறது.

எருக்கம் பழுப்புச்சாறு 2௦௦ மில்லி எடுத்து ஒரு சட்டியிலிட்டு வெள்ளைப்பூண்டு 5௦ கிராம், இலவங்கப்பட்டை 5௦ கிராம், வசம்பு 5௦ கிராம். பெரும்காயம் 5௦ கிராம் பொடித்துப் போட்டு 2௦௦ மில்லி நல்லெண்ணெயும் விட்டுக் கலக்கி பதமாய்க் காய்ச்சி வடித்து காதில் இரண்டு, மூன்றுத் துளிகள் விட்டுவர காதில் சீழ்வடிதல் நீங்கிக் குணமாகும்.

எருக்கு இலைசாற்றை எடுத்து 3௦ மில்லி விளக்கெண்ணெயில் 3 துளிவிட்டு உள்ளுக்குக் கொடுக்க இறுகிப்போன மலம் இளகும்.

எருக்கிலைச்சாற்றை 3 துளியளவு எடுத்து 1௦ துளித் தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

எருக்கன் பளுப்பைக் கொண்டு வந்து அதை வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால், எந்தவகையான வீக்கமானாலும் வாடிவிடும்.

காலில் குத்தி வெளியேறாத முள்களை வெளியேற்ற தினசரி அந்த இடத்தில் எருக்கன் பாலை விட்டு வந்தால் முள் தானே வெளியில் வந்துவிடும்.

(எருக்கு மருந்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆகாது. இம்மருந்தினால் ஏதேனும் வேதனைகள் இருப்பின் நல்லெண்ணெய் அதற்கு முறிவாகப் பயன்படுத்தலாம்.)

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...