துர்கா பூஜைக்கு பணம்! கோர்ட் தடை- மம்தா அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடு வதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக் கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.

 

இந்த ஆண்டு மேற்குவங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்தகுழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள்செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

 

துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்குவங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

துர்காபூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப் படுவதற்கு கொல்கத்தாவை சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்புதெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது துர்காபூஜைக்கு அரசு சார்பில் நிதி உதவி செய்யப் படுவதை நிறுத்தவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

 

செவ்வாய்க் கிழமை வரை இதுதொடர்பாக எந்தவித அடுத்தக் கட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மேற்குவங்க மாநில பா.ஜ.க.வும் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளது. மம்தாபானர்ஜி வேண்டுமென்றே இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்கு இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார். அவருக்கு கோர்ட்டு தக்கபாடம் அளித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...