மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை களமாக காட்சியளித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மே.வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரியும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.
இச்சம்பவத்திற்கு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி, ”மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |