வாரணாசி தொகுதியில் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பதவி ஏற்றதும் எம்பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டுவந்தார்.

அதன்படி எம்.பி.க்கள் குறைந்தது ஒருகிராமத்தையாவது தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சி திட்டபணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம், கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தற்போது நாடுமுழுவதும் 1448 கிராமங்கள் மட்டுமே எம்.பி.க்களால் தத்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இங்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் திருப்திகரமாக செயல்படுத்தப்பட வில்லை என்று உயர் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அடுத்து வருகிற மார்ச் மாதத்துக்குள் 2,370 கிராமங்களை தத்தெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இருசபைகளின் 790 எம்.பி.க்களும் கூடுதலாக கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் தனது வாரணாசி தொகுதியில் ஜெயநகர், நாகாபூர், ககார்கியா ஆகிய 3 கிராமங்களை தத்து எடுத்துள்ளார்.

தற்போது கூடுதலாக மேலும் ஒருகிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கங்கை நதியில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்புவது உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப் பட உள்ளது.

பிரதமர் மோடி கூடுதலாக ஒரு கிராமத்தை தேர்வுசெய்து இருப்பது போல் மற்ற எம்.பி.க்களும் கூடுதலாக கிராமத்தை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று முத்த அரசு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்போதைய நிலவரப்படி 790 எம்.பி.க்களில் 202 பேர் மட்டுமே தலா 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இவர்களில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதிஇரானி, சுஷ்மா சுவராஜ், நிர்மலாசீதாராமன், நரேந்திர சிங் தோமர், ராம் விலாஸ் பஸ்வான், ஹர்சிம் ரத்கவுர் பாதல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோர் தலா 3 கிராமங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தலா 3 கிராமங்களையும் தத்தெடு த்துள்ளனர்.

இதேபோல் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...