ஐந்துமாநில பேரவைத் தேர்தலில் பாஜக அடையப்போகும் வெற்றிதான் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாகைசூட அடித்தளமாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணொலி முறைமூலம் அமித்ஷா திங்கள்கிழமை உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தபிறகு, மக்கள் நலன்காக்க பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி, பல்வேறு பாதிப்புகளை விட்டுச் சென்றுள்ளது. அதனை சீரமைத்து தேசத்தை வலிமையாக்க 5 ஆண்டுகள் மட்டும்போதாது. குறைந்தது 30 ஆண்டுகளாவது பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தான் உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றமுடியும்.
சர்வதேச அளவில் பொருளாதாரத்திலும், படைவலிமையிலும் வல்லமை பொருந்திய தேசமாக முன்னேற்ற முடியும். அதைக் கருத்தில் கொண்டு பாஜக தொண்டர்கள் செயல்படவேண்டும். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வழக்கமானவை அல்ல. மாறாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அடித்தளமிடப்போகும் அதிமுக்கிய தேர்தல்கள். அவற்றில் பெறும்வெற்றிதான் பாஜகவை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரவைக்கப் போகிறது என்றார் அமித்ஷா.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.