கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

இது நடக்கும் என்று தெரிந்ததுதான்.நடக்கக் கூடாது என்று நம் மனம் விரும்பியதுதான் .ஆனால் நடந்து விடும் என்று பயந்ததுதான்.
எத்தனை நாள் சாத்வீக முறையில் இந்த நிகழ்வை தடுப்பது?
அதுவும் ஒரு வெறி பிடித்த மதவாத கம்யூனிஸ்ட் அரசின் துணை இருக்கும்போது.
.
என்ன செய்வது, நம்மை ஒருங்கிணைக்க எந்த ஒரு பொதுவான அமைப்பும் இல்லை. நம்பிக்கை ஒன்றே நம் ஆயுதம், அதுவும் “அவன் செயலை யார் அறிவார்” என்ற சித்தாந்தத்தை தீவிரமாக நம்பும் கூட்டம் இதையும் அவன் செயல் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.
.
“இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க” என்று கறுஞ்சட்டைக் காரர்களும் கம்யூனிஸ்டுகளும் ஆட்டம் போட்டு cheers சொல்லிக்கொள்ளும் நேரம் இது. அவர்களுக்கே உரிய racist மன நிலை உக்கிரமாக வெளிப்படும் நேரம். ஐயப்பனை வசை பாடும் துர்சமயம் இது.
.
உங்க கடவுளுக்கு எதுக்கு பாதுகாப்பு என்று “பகுத்தறிவு” பேசும் பைங்கிளிகள் “ஏம்ப்பா, உங்க ஐயப்பனுக்கு ஒன்னும் ஆகலையா” என்று நக்கல் செய்யும் போறாத காலம் இது.
.
இன்னும் சிலர் என்னதாம்பா செய்றார் மோடி என்று அலுத்துக் கொண்டு அவருக்கு எதிரான கோஷங்கள் போடுகின்றனர். இதைத்தான் “அவர்களும்” எதிர்பார்துக் காத்திருக்கின்றனர். Its a trap!
.
இவை எல்லாவற்றையும் அடிபட்ட வேதனையோடு கடந்து வேண்டிய நேரம். நமக்கு. ஆனால் இது நிச்சயமாக கையறு நிலை அல்ல. ராமன் வனவாசம் சென்ற இரவில் நாடே குலுங்கி அழுததாம். இதுவும் ஒரு சோதனையான தருணம் தான். எந்த ஒரு சோதனையும் முடிவைச் சொல்வதல்ல. இதுவும் முடிவல்ல, நல்ல தொடக்கத்திற்கு ஆரம்பம் எனக் கொள்வோம்.
.
ஐயனைக் காண, “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்று பாடிக்கொண்டு போவது போல், இந்த சோதனையும் காலுக்கு மெத்தை என்று பாடாவிட்டாலும், அடி பட்டு கீழே விழாமல் இருக்க ஐயப்பன் நமக்கு அருள் தர வேண்டும்.
.
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றார் அவரும்
பாதத்தைத் தந்திடுவார்.
.
பாத பலம் கேட்போம்,
இனிவரும் காலங்களில் இந்த தீய சக்திகளை பந்தாட பாத பலம் கேட்போம்!

-ச. சண்முகநாதன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...