வருகிற மக்களவைத்தேர்தலில் தினம் ஒருபிரதமர் இருப்பார். ஆனால், ஞாயிறு மட்டும் விடுமுறை என பாஜக தேசியதலைவர் அமித் ஷா, புதன்கிழமை புது பட்டியலை வெளியிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளால் நமது மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். ராகுலுக்கும், காங்கிரஸுக்கும் அயோத்தி குறித்துபேச தகுதியற்றவர்கள். பிரதமர் மோடியின் அரசு ராமர் கோயிலுக்கு வழங்கிய 42 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் கட்சிதான் வழக்கு தொடர்ந்து தடுத்து விட்டது.
மகாகூட்டணி ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய பிரதமர் கிடைப்பார். அதன்படி,
திங்கள்கிழமை – மாயாவதி
செவ்வாய்கிழமை – அகிலேஷ் யாதவ்
புதன்கிழமை – மம்தா பானர்ஜி
வியாழக்கிழமை – சரத் பவார்
வெள்ளிக்கிழமை – தேவே கௌடா
சனிக்கிழமை – மு.க.ஸ்டாலின்
ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தநாட்டுக்கு விடுமுறை விடப்படும்
உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சிபணியாற்ற வேண்டும்.
மாயாவதி பல வீனமான அரசு வேண்டும் என்கிறார், அது ஊழலுக்குதான் வழி வகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்கமுடியும். எதிர்க்கட்சியினர் இது போன்ற தலைவரால் ஆட்சி செய்யப் படுவதை விரும்ப வில்லை.
2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்கமுடிந்தது என கூறப்பட்டது. இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெறசெய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கி விட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.