கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை அப்பகுதியில் உள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்தில் கண் கலங்கியபடி பெரியவர்களிடம் ஆசி பெற்றார்.
இதனையடுத்து அவர் பேசும் போது, “உங்களிடம் வாக்குசேகரிக்க நான் வரவில்லை. உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன். இங்குகாணப்படும் அன்பை போல நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும்வழியில் பெரியவர்கள் பலர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க காத்திருந்து எனக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
இவற்றை பார்க்கும் போது (கண்கலங்கியபடி) நம் நாட்டின் மீதும் நமது பிரதமர் மீதும் நீங்கள் எல்லாம்கொண்டுள்ள அன்பை வெளிக் காட்டுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்தியா மிகச்சிறந்த வளர்ச்சியை பெறும். நமது குழந்தைகளுக்கு வளமான இந்தியாவை வழங்க வேண்டியது நம் பொறுப்பு. நம் நாடு 450 ஆண்டுகளுக்குமுன் இருந்த வளமான இடத்திற்கு செல்லத் தான் போகிறது” என்றார்.
முன்னதாக, அந்த வளாகத்தில் ராமநவமியை முன்னிட்டு சிறப்புநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இல்லவாசிகள் அனைவரும் அண்ணாமலைக்கு ஆசிர்வாதம் வழங்கினர். மேடையில்இருந்த பெரியவர்களிடம் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு பெரியவர்கள் மலர்கள் தூவி, மந்திரங்கள் கூறி ஆசி வழங்கினர்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |