பாஜக நிர்வாகி காலில் விழுந்த பிரதமர் மோடி

நாட்டிலேயே பெரியமாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்டதேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

அடுத்த வரும் ஜன. 23இல் அடுத்தகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்தத்தேர்தலில் மத்திய உபி-இல் உள்ள 9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிரமுயற்சி எடுத்து வருகிறது. அங்கு தற்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே எந்தவொரு கட்சியும் ஆட்சியை தக்கவைத்தது இல்லை. இதனால் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் பல்வேறு தலைவர்களும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜகவின் உ.பி. மாநிலதலைவர் சுதந்திர தேவ்சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ராமர் சிலையைப் பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அதன்பின்னர் உன்னாவ் மாவட்ட தலைவர் பாஜக அவதேஷ் கட்டியார் பிரதமரின் பாதங்களைத்தொட்டு வணங்கினார்.

அவரை தடுத்த பிரதமர் மோடி, யாரும் யார்காலிலும் விழக்கூடாது என்று விளக்கினார். மேலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் மேடையிலேயே பிரதமர் மோடி, அவதேஷ் கட்டியார் காலில்விழுந்தார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் காலில் தொண்டர்கள் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் விழுந்துவணங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தவறான செயல் என்பதை விளக்கும்வகையில் பிரதமர் செய்த இச்செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

அவதேஷ் கட்டியார் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவால் உன்னாவ்மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்குமுன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொது செயலாளராக இருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...