பால் மற்றும் மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை

இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்” என தமிழக பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலைஆதரித்து தமிழக பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தபோது பேசுகையில், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமரமோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில்11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வதுஇடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தானபா.ஜ.க  அரசின் சாதனை.

மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம். சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும், எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தியாவினபாதுகாப்பை பிரதமர் மோடிஉறுதி செய்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

திருவள்ளூரில் பா.ஜ.க  வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அண்ணாமலை பேசுகையில், பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வெகுவாகஉயர்ந்துள்ளது. 33மாதங்களில், தி.மு.க., 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மத்திய அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக உள்ளனர். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம்ரூ.6 ஆயிரம் கொடுக்கும் ஆட்சி தான் பாஜ.க  இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...