கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல்பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்து இருகட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை நந்தனம் கிரவுன் பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இபிஎஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ்கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ,  அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இன்றைய பேச்சில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்: 2019 பொதுத் தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. இருகட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவுசெய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக.,வுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...