இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை :
பல்வேறு மாவு உணவுகள், எண்ணெயில் பொறித்தவை, முட்டை, பல்வேறு இறைச்சி வகைகள், ஊறுகாய் வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், உப்பு நிறைந்த பிஸ்கட் வகைகள்,
பிறகு, "ஸ்டீராய்டு" வகை மருந்துகள், ஆஸ்பிரின், பினைல்பூட்டோஷன் போன்ற மருந்துகள் உடலில் "சோடியத்"தின் அளவை நிலைபெறச் செய்வதால் அது அதிகமாகி இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
பொதுவாக உணவில் உப்புச் சத்தைக் குறைக்க வேண்டும். உலர்ந்த மீனான கருவாட்டில் அதிக அளவு உப்பு இருப்பதால் அதனையும் குறைத்து விடுவது நல்லது.
புரோட்டீன் :
இவர்கள் புரோட்டீன் உணவை ஓரளவு சேர்த்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தநோய் அதிகமாக இல்லாதபோது இவர்கள் தினமும் 40 முதல் 60 கிராம் வரை புரோட்டீன் உணவை உட்கொள்ளலாம். மிகவும் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 40 கிராம் வரை புரோட்டீன் உணவைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கொழுப்பு :
தினமும் 40 முதல் 50 கி வரை கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் அதிகமான அளவு கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொண்டால், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகமாகும்.
கார்-போ-ஹைட்ரேட் :
கார்-போ-ஹைட்ரேட் மூலமாகத்தான் இவர்கள் உடல் வேலை செய்வதற்கு தேவையான சக்தியைப் பெற வேண்டும்.
கலோரி :
மிகவும் பருமனாகவும், தொந்தியாகவும் இருப்பவர்கள் மொத்த உணவின் அளவைக் குறைப்பதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் கலோரியின் அளவைக் குறைக்கலாம்.
உப்பு:
உணவில் சோடியம் மற்றும் உப்புச் சத்தின் அளவை ஓரளவு குறைக்கலாம். அதற்காக உப்பே போடாமல் சாப்பிட்டால் அதுவும் உடலிலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். புரோட்டீன் ஜீரணமாவதுடன் அதில் ஏற்படுகின்ற பல்வேறு இரசாயன மாற்றங்களால் ஏப்பம் ஏற்படும்.
வறுத்த கொழுப்பு உணவுகள் நீண்ட நேரம் வயிற்றில் அதிகமாக இருக்கின்ற போது அவை சிறுகுடலுக்குச் செல்லாமல் இருக்கின்ற படியால் அவை வயிற்றுப் பெருக்கத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மிகவும் பருமனாக இருப்பவர்களும், தொந்திக்காரர்களும் பொதுவாகச் சாப்பிடுகின்ற உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.