ரூ.40,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று (மார்ச் 01) கன்னியாகுமரி வர உள்ளார். இதனை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகைக்கு வர உள்ளார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்ல உள்ளார். இந்தவிழாவில் மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த அதிநவீன ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் எழும்பூரை சென்றடையும். ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், கண்காணிப்புகேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் ரயிலுக்கான வழக்கமான முன்பதிவு நாளை (மார்ச் 02) தொடங்கப்படுகிறது.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரூ.208 கோடி செலவில் புதியரயில்பாதை மற்றும் பாம்பனில் ரூ.250 கோடி செலவில் ரயில் சேவைக்காக புதியபாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி நகர் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.