கடந்த சனியன்று (ஆக.,31) தமிழகத்தில் இரு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார்.அந்த இரு வந்தே பாரத் ரயில்களும் இன்று (செப்.,02) திங்கள் அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், மதுரையிலிருந்து பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரயில் ஒன்றும் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்டன.
எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்
* சென்னை – நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும். * மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு, நாமக்கல், 9:15க்கு, சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.
* மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |