தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்னை, சென்ட்ரல் ரயில்நிலையம் இனி ‘எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம்’ என்று அழைக்கப்படும். ரயில்வேஅமைச்சர் இங்கு உள்ளார். விரைவில் அவர் உத்தரவை பிறப்பிப்பார்.
தமிழகத்திலிருந்து செல்லும் விமானங்கள் தமிழகத்திற்குவரும் விமானங்கள் தொடர்பாக விமான நிலையங்களில் தமிழ்மொழியில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியாசார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 1,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன; தற்போது 3,000 வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது; இப்பணி விரைவில் முடிக்கப்படும்.
மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள், பிரச்னையில் சிக்கி தவித்தபோது அவர்களை மீட்டுவந்தோம். பாதிரியார் பிரேம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டார். மத்திய அரசு இரவுபகலாக பணியாற்றி அவரை மீட்டுவந்தது. விமானப்படை வீரர் அபிநந்தன் இருநாட்களில் மீட்கப்பட்டார். இலங்கை சிறையிலிருந்த 1,900 தமிழ் மீனவர்கள் மீட்கப்பட்டு வீடுதிரும்பி உள்ளனர். சவுதிஅரேபிய இளவரசருடன் பேசி அங்கு சிறையில் இருந்த 850 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
தேசிய பாதுகாப்பு முக்கியம். ஆனால், எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான இந்தியாவை விரும்பவில்லை; வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. மாநிலங்களின் தேவைகளை பூர்த்திசெய்யாமல் நாடுமுன்னேற முடியாது. ஆனால் காங்கிரஸ் அரசால் மாநிலத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாது. அவர்கள் குடும்ப நலனை மையமாக வைத்து முடிவெடுக்கின்றனர்.
காங்கிரசை ஆதரிப்பது ‘ஏசி’ அறையில் அமர்ந்து முடிவெடுக்கும் சூழலை உருவாக்கும். தமிழககிராமங்களில் இருந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இருக்காது. வலிமைமிகுந்த மாநிலத்தலைவர்களை காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது. காமராஜர் அவமானப்படுத்தப்பட்டார். டில்லியில் இருந்த ஊழல் மற்றும் சர்வாதிகாரமிக்க குடும்பத்தின் ஆட்சியை எதிர்த்தார். அதனால் அவர் அவமானப்படுத்த பட்டார் .
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அரசை காங்., ஆட்சி ‘டிஸ்மிஸ்’ செய்தது. அரசியல்கருத்து வேறுபாட்டிற்காக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் பழக்கம் காங்கிரசுக்கு உண்டு. திமுக., ஆட்சியையும் கலைத்தது. ஆனால், தி.மு.க., இன்று அவர்களுடன் சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாதம்.
மோடி வெறுப்பு என்பது புதிய எல்லைகளை தாண்டிபோய் கொண்டிருக்கிறது. யார் அதிகமாக, மோடியை வசைபாடுவது என்பதில், அவர்களுக்கு இடையே போட்டி உள்ளது. சிலர், என்குடும்பத்தை விமர்சிக்கின்றனர்; சிலர், என்னை வசைபாடுகினறனர்; சிலர், எனது ஏழ்மையை வசைபாடுகின்றனர்; சிலர், என் பிற்படுத்தப்பட்ட வகுப்புபின்னணியை வசைபாடுகினறனர்.
காங்கிரஸ் தலைவர் ஒருவர், என்னை கொலைசெய்ய வேண்டும் என்கிறார். உங்களுடைய பயமுறுத்தலுக்கு, நான் கவலைப்படவில்லை. எனது பணியைசெய்ய விரும்புகிறேன். இந்தியாவை வலிமையாக்க, எனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் செலவிடுவேன். ஒவ்வொரு நொடியும், இந்தியாவிற்காக உழைப்பேன்.
ஜனநாயகத்தில், சரியான கேள்விகளைகேட்க, மக்களுக்கு உரிமை உள்ளது. எதிர்கூட்டணி, கலப்படகூட்டணி; குறிக்கோள் இல்லாத கூட்டணி. உங்கள் கூட்டணிக்கு, தலைமை யார் என்பதை, அறிவிக்கவேண்டும். மோடியை தடுப்பதற்காக மட்டுமே கூடியுள்ளனர். நாட்டை வழிநடத்தி செல்வதற்கான திட்டம், அவர்களிடம் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழைமக்கள் நலனின் உறுதியாக உள்ளது. சமூக நீதியில், நியாயமாக செயல்படுகிறோம். ஊழலை ஒழிப்பதில், எந்தசமரசமும் கிடையாது. தேசிய பாதுகாப்பில், வலிமையை காட்டிக் கொண்டிருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு, எந்தமன்னிப்பும் கிடையாது. நாடு முதன்மையானது; மக்கள் முதன்மையானவர்கள். நான்கரை ஆண்டுகளில், மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மக்கள் ஆசிர்வாதத்தோடு, இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறோம்.
அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று சென்னை அருகே தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் பேசியது:
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.