இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது. அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன. “பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன”. தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது , புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
“இன்று ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த சிறப்புமிக்க நாளில், ₹8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்க தமக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள், தமிழ்நாட்டில் போக்குவரத்துத் தொடர்பை கணிசமாக மேம்படுத்தும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்.
ராமேஸ்வரம், பாரத ரத்னா டாக்டர் கலாமின் பூமி அறிவியலும் ஆன்மிகமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணைகின்றன என்பதை அவரது வாழ்க்கை நிரூபித்தது . “ராமேஸ்வரத்திற்குக் கிடைத்துள்ள புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் இணைப்பைக் குறிக்கிறது”. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு நகரம் இப்போது 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தால் இணைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி. இந்தப் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலம் . இது பெரிய கப்பல்கள் அடியில் பயணிக்க அனுமதிக்கிறது ,அதே நேரத்தில் விரைவான ரயில் பயணத்தை செயல்படுத்துகிறது.
மக்களின் ஆசிர்வாதத்துடன், இந்தப் பணியை முடிக்கும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்தது. பாம்பன் பாலம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் பயணத்தை எளிதாக்குதல் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய ரயில் சேவை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணைப்பை மேம்படுத்தும். இந்த வளர்ச்சி, தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்குப் பயனளிக்கும் , இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் .
“கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது”. இந்த விரைவான வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நாட்டின் குறிப்பிடத்தக்க நவீன உள்கட்டமைப்பு ஆகும். கடந்த பத்தாண்டுகளில், ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. “இன்று, நாடு முழுவதும் பிரமாண்டமான திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன” வடக்கில், ஜம்மு-காஷ்மீரில், உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான செனாப் பாலம் கட்டப்பட்டுள்ளது . மேற்கில், நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது மும்பையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில், அசாமில் உள்ள போகிபீல் பாலம் முன்னேற்றத்திற்கு சான்றாக நிற்கிறது , தெற்கில், உலகில் உள்ள ஒரு சில செங்குத்து தூக்கு பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நாட்டின் முதலாவது புல்லட் ரயிலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது , வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் போன்ற நவீன ரயில்கள், ரயில் கட்டமைப்பை மேலும் மேம்பட்டதாக ஆக்குகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணையும்போது, வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதை வலுப்பெறும். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வளர்ந்த நாடு மற்றும் பிராந்தியத்திலும் இதுதான் நிலை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இணையும்போது, நாட்டின் முழு திறனும் உணரப்படுகிறது . இந்த இணைப்பால் தமிழ்நாடு உட்பட நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பயனடைகிறது.
“வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது” தமிழ்நாட்டின் வளங்கள் வளர, வளர, இந்தியாவின் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி அதிகரிப்பு, மாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது . கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் ஏழு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ₹900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ₹6,000 கோடியைத் தாண்டியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையம் உட்பட மாநிலத்தில் உள்ள 77 ரயில் நிலையங்களை மத்திய அரசு நவீனமயமாக்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ளது. 2014 முதல் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் 4,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தை இணைக்கும் உயர்மட்ட வழித்தடம், குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புக்கு மற்றொரு உதாரணமாக இருக்கும். இன்று, சுமார் ₹ 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதுடன், ஆந்திரப் பிரதேசத்துடனான இணைப்பையும் வலுப்படுத்தும்.
சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுப் போக்குவரத்து அமைப்பு முறைகள், தமிழ்நாட்டில் பயணத்தை எளிதாக்கியுள்ளன. விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடு பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பில் சாதனை அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சிகளால் தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 12 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில், சுமார் 12 கோடி கிராமப்புற குடும்பங்கள் முதல் முறையாக குழாய் மூலம் குடிநீரைப் பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 11 லட்சம் குடும்பங்களும் அடங்கும், அவர்கள் இப்போது முதல் முறையாக தங்கள் வீடுகளில் குழாய் நீரைப் பெறுகிறார்கள் “மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சுகாதார சேவையை வழங்குவது எங்கள் அரசின் உறுதிப்பாடு” ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு ₹8,000 கோடி செலவு மிச்சமாகியுள்ளது. தமிழ்நாட்டில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் செயல்படுகின்றன. அங்கு மருந்துகள் 80% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். இந்த மலிவு விலை மருந்துகளின் விளைவாக மக்களுக்கு ₹700 கோடி மிச்சமாகியுள்ளது
மருத்துவர்களாவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இனியும் இந்தியர்களுக்கு ஏற்படாது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு உதவும் வகையில், தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியில் படிப்புகளை மாநில அரசு வழங்க வேண்டும்.
“வரி செலுத்துவோர் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் ஏழை மக்களுக்குப் பயனளிப்பதை நல்லாட்சி உறுதி செய்கிறது” பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் விவசாயிகள் கிட்டத்தட்ட ₹12,000 கோடியைப் பெற்றுள்ளனர். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், ₹ 14,800 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடல்சார் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தத் துறையில் தமிழ்நாட்டின் வலிமை உலகளவில் அங்கீகரிக்கப்படும். தமிழக மீனவ சமுதாயத்தின் கடின உழைப்பு மற்றும் மாநிலத்தின் மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலம் கணிசமான நிதியைப் பெற்றுள்ளது. மீனவர்களுக்கு நவீன வசதிகளை வழங்குகிறது. இதில் கடற்பாசி பூங்காக்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீன்களை தரையில் இறக்கும் பகுதிகள் ஆகியவற்றை அமைப்பதற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளிட்டவை அடங்கும். மீனவர்களின் பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இருந்து 3,700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தியா மீது வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தால், நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உலக மக்கள் ஆர்வமாக உள்ளனர். தமிழ் மொழியும், பாரம்பரியமும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது” 21-ம் நூற்றாண்டில், இந்த மகத்தான பாரம்பரியம் மேலும் முன்னேற வேண்டும். புண்ணிய பூமியான ராமேஸ்வரமும், தமிழ்நாடும் தொடர்ந்து நாட்டுக்கு உத்வேகம் அளித்து உற்சாகப்படுத்தும்.
இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் என்று குறிப்பிட்ட ஒவ்வொரு பிஜேபி தொண்டர்களின் அயராத முயற்சிகளால் உந்தப்பட்டு வலுவான, வளமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும். பிஜேபி அரசுகளின் நல்லாட்சியையும், தேச நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளையும் நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள பிஜேபி தொண்டர்கள் அடிதட்ட அளவில் பணியாற்றி, ஏழைகளுக்கு சேவை செய்யும் விதம் குறித்து பெருமிதமாக உள்ளது . லட்சக்கணக்கான பிஜேபி தொண்டர்களுக்கு தமது நன்றியையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியது
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |