உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில், நோயின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமே! இதன் மூலமாக பக்கவிளைவுகள் ஏராளமாக உண்டாகின்றன; பெரும்பாலான முதல் பக்கவிளைவு அலோபதி மருத்துவசிகிச்சையால் அல்சர் உண்டாவதுதான்! இதனால்,கடந்த ஒரு நூற்றாண்டாக நமது நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை சில கோடிகளைத் தாண்டும் என்பது கசப்பான நிஜம்!!!

ஆனால்,கடந்த பல நூற்றாண்டுகளாக நமது புராதன மருத்துவமுறைகளான சித்தா,ஆயுர்வேதம்,நியூரோதெரபி போன்ற வைகளின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில்,ஒரு நோய் நமது உடலின் எந்தப் பகுதியில் செயல்படுகிறதோ,அங்கே சித்த/ஆயுர்வேத மருந்துகள் புகுந்து,நோய்க்குக் காரணமான கிரிமிகளை அழித்து வெளியேற்றுவதும், அப்படி வெளியேற்றியபின்னர்,அந்த உடல் உறுப்பின் உயிர்த்தன்மையை வலிமைப்படுத்துவதும் ஆகும்.இப்படி செயல்படுவதற்கு குறைந்த பட்சமாக 6 மாதமும்;அதிகபட்சமாக 3 ஆண்டுகளும் ஆகும்.அதன்பிறகு அந்த நோய் திரும்பவும் வருவதில்லை;

சித்த,ஆயுர்வேத மருத்துவம் இந்திய மூலிகைகளின் மூலமாக வளர்ந்தது. புராதன சித்தர்களும்,ரிஷிகளும் இந்த மருத்துவமுறைகளில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்.சரி,மூலிகை என்றால் என்ன?

எந்த ஒரு தாவரம் மனிதனின் குறிப்பிட்ட ஒரு அல்லது சில நோயை குணப்படுத்துகிறதோ அது மூலிகை எனப்படும்.மனிதனின் நோயை குணப்படுத்துவது அந்த தாவரத்தின் கனியாக இருக்கலாம்; காய், இலை, தண்டு, வேர்,மரப்பட்டை மற்றும் முளைக்கும் திறனுள்ள இணுக்காக இருந்தாலும் அது மூலிகை என்றே அழைக்கப்படுகிறது.கடவுள் மனிதனுக்கு ஒரு முக்கிய உதவியை இந்த மூலிகை விஷயத்தில் செய்துள்ளார். அது என்னவெனில், மனிதனின் எந்த உடலுறுப்பு நோயால் பாதிக்கப்படுமோ, அதே உடலுறுப்பின் வடிவில் அந்த மூலிகையின் குணப்படுத்தும் பகுதி (இலை/மடல்/பழம்) இருக்கும்.இது கடவுளின் ஆசிர்வாதம் என்றே சொல்ல வேண்டும்.உதாரணமாக நிலவேம்பு அளவற்ற கசப்புத்தன்மையைக் கொண்டது.இதன் மறுபெயர் சிறியாநங்கை ஆகும்.இதன் இலை நமது உடலில் இருக்கும் கணையம் போலவே இருக்கும். நாம் உண்ணும் உணவினை குளுக்கோஸாக மாற்றும் பணியைச் செய்வது கணையம் ஆகும்.இப்படி குளுகோஸாக மாற்றும் விகிதம் குறைந்தாலும்,அதிகரித்தாலும் அது சர்க்கரை நோயாக மாறிவிடும். இந்த விகிதத்தை ஒரே மாதிரியாக வைத்திருக்க கணையத்தைத் தூண்டுவது சிறியாநங்கை (நிலவேம்பு)ஆகும்.

அதேபோல,வல்லாரை இலை மனித மூளையின் பக்கவாட்டுவடிவத்தில் இருக்கும்;இது நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

உலகில் பகல் 12 மணி நேரம்,இரவு 12 மணி நேரம் என சமமாக கால அளவு இருக்கும் ஒரே நாடு நமது இந்தியா மட்டுமே!உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இந்த காலநிலைச் சமநிலை கிடையாது.அதனாலேயே உலக நாடுகளில் வேறு எங்குமே இல்லாத அதிசயங்கள் நமது இந்தியாவில் உண்டு. ஆமாம்!இதானலேயே இந்தியாவில் 35,000 மூலிகை இனங்கள் விளைகின்றன.இவற்றில் வெறும் 6000 மூலிகைகள் மட்டுமே மனிதனால் பயிரிட்டு விளைவிக்க முடியும்.

மூலிகைகளைப் பொருத்தவரையிலும் குமரி மாவட்ட வனப்பகுதி,சதுரகிரி வனப்பகுதி, சபரிமலை வனப்பகுதி,கேரளா மாநிலம்,ஜம்மு & காஷ்மீர், பீகாரின் சுந்தரவனக்காடுகள், வங்காளத்தின் கங்கைக் கழிமுகப்பகுதி, சேலம்பகுதியில் உள்ள கொல்லிமலைப்பகுதி, இமயமலைக் காடுகள், ம.பி.யில் இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கு, நர்மதை நதியோரத்துப் பகுதிகள், விந்திய சாத்பூரா மலைப்பகுதிகள்,அஸ்ஸாமின் உள்ளடங்கிய பகுதி என நாடு நெடுக மூலிகை வனங்கள் இருக்கின்றன.

சில மூலிகைகளின் பெயர்களை அறிந்துகொள்வோமே!

துளசி,பேய்த்துளசி,நாய்த்துளசி,கருந்துளசி,முப்பிரண்டை,புடலை, பேய்ப்புடலை, கற்றாழை, சிகப்புக்கற்றாழை, சீனித்துளசி, கருநொச்சி, சிறுகற்றாழை,சிறு ஆவரை,மூக்கண சாரணை, பால்குழை, கருவேப்பிலை,சிறுகுறிஞ் சான், தான்றிக்காய், ஜாதிக்காய், நிலவேம்பு,தூதுவளை, தாளிசப்பத்திரி, செம்பருத்தி, கடுக்காய், மாசிக்காய் ,நெல்லி, பெருநெல்லி, கருநெல்லி, வில்வம், மஹாவில்வம்,செவ்வாழை, பீநாறிச்சங்கு, நன்னாரி, மதனகாமப்பூ, தண்ணீர்விட்டான்கிழங்கு ,சேவல்கொண்டைப்பூ, அவுரி, பேய்க்கரும்பு,வசம்பு, சித்தரத்தை, காட்டுப்பலா, சதாவரி, கருதோஷ நிவாரணி, அதிமதுரம், சதாவரி, இலந்தைப்பழம், ஜவ்வாது, கீழாநெல்லி, இந்துப்பு, ஊமத்தை, வேம்பு, அமுக்கரா, கண்வலிக்கிழங்கு, நீர்முள்ளிசமூலம், வல்லாரை, ஆவாரம்பூ, அருகம்புல், ஓமம், வாசனைப்புல்,நெட்டிலிங்கம், இஞ்சி, காட்டு இஞ்சி, தாமரை , ரோஜா, ஏலக்காய், ஜாதிப்பத்திரி, பூமிசர்க்கரைக் கிழங்கு, கண்டங்கத்திரி, ஆடுதொடா,சுக்கு, இசப்பாகுல், கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி, சீந்தல்கொடி, வெந்தயம், நாவல், நெருஞ்சில், கல்யாண முருங்கை இலை, மூக்கடலை, பூனைக்காலி விதை, குங்குமப்பூ, பொன்னாங்கண்ணி, சர்க்கரைக்கொல்லி, பாகற்காய், நாய்ப்பாலை, மருதம்பட்டை, மிளகு, வால்மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், கடுகரோகிணி, சீமை நில வேம்பு, அசோகப்பட்டை, லோத்திரப்பட்டை, மூசாம்பரம், திரிபலா, திரிகடுகு, சிவதை, காட்டுச்சீரகம், வாய்விடங்கம், ஆமணக்கு, புதினா, மருதாணி, கிராம்பு, வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்கு, சித்தரத்தை, குப்பைமேனி, நீல புஷ்பம், முடக் கற்றான், செவ்வல்லிக் கொடி, குக்குழு, தகரை, கருசிவத்தை, சிறுநெருஞ்சில், சிறுபீளை, பெருநன்னாரி, மாவிலங்கப்பட்டை, ஆதாளை, கண்ணுப்பிள்ளை, வசாலை, விருந்தமாலை.

இவை அனைத்தும் நமது நாட்டின் மரபுச்செல்வங்கள் ஆகும். இந்த மூலிகைகளின் மருத்துவ குணங்களால் நமது நாட்டில் சுமார் 25,000 ஆண்டுகளாக சித்தமருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் முழுமையான ஆரோக்கியத்தை மனித குலத்துக்கு தந்து வருகின்றன. வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்,தனது ஆளுகைக்குள் இந்தியாவை கொண்டு வந்ததும்,தனது அரசியல் செல்வாக்கினால் சித்த,ஆயுர்வேத மருத்துவத்தை நசுக்கிவிட்டு,அந்த இடத்துக்கு தமது மருத்துவமான அலோபதி மருத்துவ முறையை கொண்டு வந்து விட்டனர்.

உலகமயமாக்கலுக்கு பின்னர்,பயோடெக் நிறுவனங்களும்,மருந்து நிறுவனங்களும் இந்தியாவிலேயே கால்பதிக்கத் துவங்கி யிருக்கின்றன.இவைகள் இந்திய மூலிகைகளை தமது அலோபதி மருந்துகளுடன் கலந்து விற்கத் துவங்கியுள்ளனர். மறுபுறம், மூலிகைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970களிலிருந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகளால்,இந்திய மூலிகைகளுக்கு பன்னாட்டுச் சந்தை உருவாகியிருக்கிறது. இன்று அமுக்கராக்கிழங்கு,சீந்தல்கொடி போன்றவைகள் கலந்த மூலிகை மருந்துகள் மருந்தே உணவு,உணவே மருந்து என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.இவைகள் அலோபதி மருந்துகளை விட பல மடங்கு விலை குறைவாகவும், குணப்படுத்தும் வேகம் பல மடங்கு அதிகமாகவும் இருப்பதால், இவைகளுக்கான சர்வதேசச் சந்தை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கின்றன.

மூலிகைகளை அப்படியே வெளி நாட்டுக்கு அனுப்பி லாபம் சம்பாதிப்பது குறைந்து கொண்டே வருகிறது;மாறாக,அவைகளை மதிப்பூட்டப்பட்ட(Value added) பொருட்களாக்கி விற்பனை செய்வதால், இந்திய மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்களாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன. மூலிகைகளைக் கொண்டு மூலிகைப் பல்பொடி, மூலிகை உணவுகள், மூலிகை நொறுக்குத் தீனிகள் (Snacks & Confectionary), மூலிகை எண்ணெய், மூலிகை வயாக்ரா, மூலிகை வாசனை திரவியம், மூலிகை குளிர்பானம், மூலிகை தைலங்கள் என்று தயார் செய்து விற்பனை செய்வோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துவருகிறது.இவ்வாறு தயார் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளைச் சொல்லித் தருகின்றன.

நன்றி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தி ...

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 90.76 சுய உதவிக்குழுக்களாக ஒருகிணைத்துள்ளது கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ...

உலகளாவிய சிக்கல்களுக்கு இடையி ...

உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும் இந்தியா விரைந்து வளர்ச்சியடைகிறது 2023-24 –ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை ...

7 புதிய திட்டங்களை செயல்படுத்த ...

7 புதிய திட்டங்களை செயல்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி ஒப்புதல் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஆயுதப்படை, ...

கரிஃப் பருவ சாகுபடி நிலைமை குறி ...

கரிஃப் பருவ சாகுபடி நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு தற்போதைய கரீஃப் பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பது ...

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி க ...

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா விவாதம் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப ...

ஆர்.எஸ் பாரதியை சிறைக்கு அனுப்ப ...

ஆர்.எஸ் பாரதியை சிறைக்கு அனுப்புவோம் -அண்ணாமலை உறுதி அவதூறு வழக்கில் தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விரைவில் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...