வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இன்று பிற்பகல் வாரணாசியை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை தொடங்குகிறார். அங்கிருந்து, பழங்காலகோயில்கள் மற்றும் கோட்டைகள் வழியாக சென்று இறுதியாக தசஸ்வமேத்தில் பேரணி முடிவடைகிறது.
இந்தப்பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து கங்கைநதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார். இதன்பின்னர் வாராணசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் மோடி, நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக நாளை பாஜக தொண்டர்கள் மத்தியிலான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். இந்த இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்திலும் மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் உடன்இருக்க உள்ளனர்.
வாரணாசியில் மிகபரபலமான நபராக இருந்துவரும் மோடி, அங்கு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலைகளை அகலப்படுத்துவது, உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.