வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3வது ஆண்டாக, இன்று (பிப்.,15) துவங்கி, பிப்., 24ம் தேதி வரை நடக்க உள்ளன.

இன்று மதியம் 3.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா​வில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்​யநாத், மத்திய அமைச்சர் எல்.​முருகன் உள்ளிட்​டோர் கலந்து கொள்​கின்​றனர்.

இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., செய்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகா கும்பமேளாவுக்கு இடையே தமிழ்ச் சங்கமம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

காவிரி-கங்கை, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு உள்ளது. காசிக்கு வரும் தமிழக மக்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...