பாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல்

பாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் நிபுணர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்துவந்தனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும் கூறியிருந்தது.

இது தொடர்பாக,பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேசும்போது கூறியதாவது:-
ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதால் பா.ஜனதா உள்பட பல மாநிலங்களின் ஆட்சிக்கு இழப்பு ஏற்படலாம். ஆனால் அரசியல் கட்சிகள் குறுகியநோக்கத்துடன் அதை பார்க்காமல் தேசிய நலனை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.  ஒரு கட்சியோ அல்லது ஒரு ஆட்சியோ இதைதீர்மானிக்க முடியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து தேர்தல் நடத்துவதால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது ரூ.1,100 கோடிக்குமேல் செலவு ஆனது. 2014-ம் ஆண்டு தேர்தலில் அது ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரித்துவிட்டது. மேலும் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிறது. தேர்தல்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நம் தேச பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. எனவே இதற்கு தீர்வு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது தான்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மத்திய திட்டக் குழுவான நிதி ஆயோக் அமைப்பும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக பிறகட்சி தலைவர்கள் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் சேர்த்து நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில், பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் வரும் 19-ம் தேதி நடைபெறும் இந்தஆலோசனை கூட்டத்தில் நாட்டின் எதிர்கால நலன்கருதி சிலமுக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் உங்களது கருத்துகளை தெரிவிக்க அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறைமந்திரி பிரகலாத் ஜோஷி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.