சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது. சாதாரணமாகப் பெண்களுக்கு 2000 கலோரி சத்து தேவைப்படுகிறது.
கர்ப்பமான காலகட்டத்தில் பெண்ணின் கருப்பையில் வளருகின்ற சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் சக்தி தேவைப்படுகிறது. பெண்கள் கர்ப்பமான காலகட்டத்தில் போதுமான சத்தான உணவை உட்கொள்ளாவிட்டால்.;. குழந்தை "குறைப் பிரசவமாக"ப் பிறக்க வாய்ப்பு உண்டு. பிறக்கின்றபோது எடை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
கலோரி :
முதல் சில மாதங்களில் குறைந்த அளவும் பின் பகுதியில் தினமும் 300 கலோரி அதிகமாகவும் கிடைக்கிறது. அதே நேரத்தில் கர்ப்பிணி எடையை மாதம் தோறும் அளவு எடுத்து பார்ப்பது அவசியம். எடை மிகவும் அதிகமாகக் கூடினாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சராசரியாக மாதமாய் இருக்கும் பெண்கள் இறுதியில் தங்களால் உடல் எடையில் மொத்தம் 1 கிலோ எடை கூடியிருக்க வேண்டும். இவர்களுக்கு உடல் எடை சீராகக் கூடி வரவேண்டும். முதல் சில மாதங்களில் எடை கூடாமல்… மிகவும் குறைவாக இருக்குமானால் அது "குறைமாத பிரசவத்திற்கு" அறிகுறியாகும். இதேபோன்றே முதல் சில மாதங்களில் எடை அபரிமிதமாக அதிகமானால் அது பிற்காலத்தில் விஷ கர்ப்பம் ஏற்படுவதற்கு அறிகுறியாகும்.
சிலருக்கு கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இந்த விஷயத்தில் இருக்க வேண்டும்.
புரோட்டீன் :
இவர்கள் புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் தவறாமல் உண்ண வேண்டும். கர்ப்பமான ஆரம்பக் கட்டத்தில் கரு வளருவதற்கும், திசுக்கள் உருவாகுவதற்கும் இது மிகவும் தேவைப்படுகிறது.
இரும்புச் சத்து:
மாதமாக இருக்கின்ற கால கட்டத்தில் இரும்புச் சத்து மிகவும் அவசியமானது ஆகும். இந்த கால கட்டத்தில் "இரத்தப்போக்கு" இல்லாத காரணத்தால் மாதத்திற்கு 240 மி.கி. இரும்புச் சத்து வீணாவது தடுக்கப்படுகிறது. 700 மி.கில் இருந்து 1000 மி.கி. வரை உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தினமும் 8 மி.கில் இருந்து 100 மி.கி. வரை அதிகமாகத் தேவைப்படும் "இரத்தச்சோகை' உள்ளவர்களுக்கு அதக அளவு "இரும்புச் சத்து" தேவைப்படும். கடைசி மாதங்களில் சாதாரணமாகத் தேவைப்படுவதைவிட மூன்று மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
கால்சியம் வைட்டமின் :
கர்ப்பமான பெண்களுக்கு அதிக அளவு 'கால்சியம்' தேவைப்படுகிறது. ஏனெனில், வளரும் சிசுவிற்கு எலும்பு, பற்கள் ஆகியவை ஏற்படுவதற்கு அதிகப்படியாக இந்தச் சத்து தேவைப்படும். கர்ப்பிணிகளுக்கு 1.5 கிராம் சத்து தேவைப்படுகிறது. இதேபோன்றே வைட்டமின் 'டி' 400 ஐ.யூ; என்ற அளவில் தேவைப்படுகிறது. இந்த அளவில் இந்த வைட்டமின் கிடைத்தால் தான் "கால்சியம்" மற்றும் "பாஸ்பரஸ்" ஆகியவற்றைச் சிசுவும், தாயின் உடலும் பயன்படுத்த முடியும்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.