அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.
அகத்தியில் இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூக்களையுடையது அகத்தி என்றும் செந்நிறப் பூக்களை உடையது செவ்வகத்தி என்றும் பெயர் பெரும். இதன் இலை, பூ, வேர், பட்டை எல்லாம் மருந்து பொருள்களாக உபயோகப்படுகிறது. இதன் சுவை கைப்பும், கார்ப்பும் உடையது. இந்தக் கீரை முறைப்படி சமைத்து உண்டால், விஷநீக்கி, குளிர்ச்சி உண்டாக்கும். வெப்பதையகற்றும். மலமிளக்கி செரிப்பு உண்டாக்கும்.
இக்கீரையின் சாற்றை எடுத்து மூக்கில் 2 சொட்டு மூக்கிலிட நான்காம் முறை சுரம் விலகும். சாதாரண நாட்களில் சாற்றை உடம்பின் மீது பூசி வர வெப்பம் தணியும். சிரசிற் தேய்த்து தலை மூழ்க பைத்தியம் தணியும். தேனும். சாரும் கலந்து உச்சியில் தடவ சிறுவர்கள் நீர்க்கோவை போகும். இதையே மூக்கிலிட, நீர்க்கோவை, தலைவலி இவை தீரும். இலையை அரைத்துப் புற்கை செய்து, காயங்களுக்குக் கட்ட காயங்கள் ஆறும்.
இலையைச் சமைத்துண்பது போல், இதன் பூவையும் சமைத்துண்ண, வெயிலாதிகளாலும் புகையிலை சுருட்டு முதலியவைகளாலும், பிறந்த பித்த தோடத்தையும் உடலிற்தோன்றும் வெப்பம் தணியும்.
சளி, இருமல், தும்மல் குணமாக
அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் எடுத்து தேன் விட்டுச் சாப்பிட சளி, இருமல், தும்மல் இவைகள் நீங்கும்.
மலச்சிக்கல் குணமாக
காய்ச்சிய பசும் பாலுடன் அகத்திப் பூவைச்சேர்த்து சாப்பிட்டு வர நாளடைவில் உடல் உஷ்ணம் தணியும். இப் பூவையும் பருப்புச் சேர்த்து கூட்டாகச் சமைத்து உண்ணலாம். மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் சக்தி இதற்குண்டு.
இருதய பலம் பெற
தேவையான அளவு அகத்தி பூவை எடுத்து சுத்தம் பார்த்து ஆய்ந்து அத்துடன் பருப்பு வகையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் நாளடைவில் இருதய பலம் பெரும்.
அகத்திப் பூவில் கால்ஷியம் சத்து அதிகமுள்ளது. எனவே எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவையும் உறுதியையும் தரவல்லது.
குடற்புண் ஆற
வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, கைப்பிடி அளவு அகத்திக் கீரையும், பூவையும் எடுத்து சாறு பிழிந்து சுமார் 2 அவுன்ஸ் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நாளடைவில் குடற்புண் ஆறி விடும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.