நாடு சரியானபாதையில் செல்வதாக ஆய்வு

நாடு சரியானபாதையில் செல்வதாகவும், வேலையின்மை தான் மிகவும் கவலையளிப்பதாக இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் பெரும் பாலானோர் தெரிவித்துள்ளனர்.

சந்தை ஆய்வு நிறுவனமான, ‘இப்சாஸ்’ சமீபத்தில் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நகர்ப்புற இந்தியர்களை பொறுத்த வரை, கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள், வேலையின்மை பிரச்னைதான், கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 69 சதவீதத்தினர், நாடு சரியானபாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

நிதி மற்றும் அரசியல்சார்ந்த ஊழல்கள், குற்றம் மற்றும் வன்முறைகள், வறுமை, சமூக சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் ஆகியவையும், இந்தியர்களை அதிகம் கவலையடைய செய்துள்ளது. உலக நாடுகளைச்சேர்ந்த, 61 சதவீதம் பேர், அவரவர் நாடு சரியான பாதையில் செல்வதாக கூறியிருக்கும் நிலையில், இந்தியாவில்தான், 69 சதவீதம்பேர், சரியான பாதையில் போவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், 46 சதவீதம் பேர், வேலையின்மை பிரச்னைகுறித்து கவலை கொள்வதாக தெரிவித்து இருக்கும் நிலையில்,அடுத்தமாதத்தில் இது மேலும், 3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு, ஒவ்வொரு மாதமும், 28 நாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு, அக்டோபரில் எடுக்கப் பட்டதாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...