‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவாதம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘மசோதாக்கள் மீதான விவாதம் தனித்தனியாக நடைபெறும். அவையில் பேச அனைத்து கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்
அமித்ஷா அறிவிப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |