மோடி எனது நண்பர், ஜென்டில் மேன்

“இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குஜராத்தில் சுமார் 70 லட்சம்பேர் திரண்டு வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றபிறகு, டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் முதல்முறையாக இந்தியாவருகிறார். இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் குஜராத், டெல்லியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவரும் அதிபர் டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக டிவிட்டர் பக்கத்தில் வீடியோபதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிரம்பை வரவேற்க தாங்கள் பயன் படுத்தும் மொழியை குறிப்பிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் குஜராத் பயணத்தின்போது அகமதாபாத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கிரிக்கெட்மைதானத்தை பிரதமர் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது திகழும்

இதன்பின்னர் மைதானத்தில் நடைபெறவுள்ள how are you trump என்ற பொருள் கொண்ட கெம்ச்சோ டிரம்ப் கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்கிறார். ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை போன்று பல்லாயிரக் கணக்கானோர் மத்தியில் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் உரைநிகழ்த்துவார் என கூறப்படுகிறது.

பின்னர் சபர்மதி நதி முகத்து வாரத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையே பேச்சு வார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து 14 , 239 கோடி ரூபாய் மதிப்பில் நாசாம்ஸ் வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், 18 ,510 கோடி ரூபாய் மதிப்பில் கடற்படை ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திடும் என கூறப்படுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், சிறந்த நற்பண்புகளை கொண்ட நல்லமனிதர் என்றும் பாராட்டினார். மோடியுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரையிலும் 50 லட்சம்பேர் முதல் 70 லட்சம்பேர் வரை வரவேற்பு அளிப்பார்கள் என மோடி கூறியதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...