அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் உஷ்ண சம்பந்தப்பட்ட பிணிகளைத் தணிக்கவல்லது.
ஆறாத புண், படை, தேமல் குணமாக
அல்லியின் இதழ்களைக் கொண்டுவந்து சுத்தம் பார்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, வதிக்கிய இதழ்களை எடுத்துப் புண்களின் மீது வைத்துக் கட்டினால் நாளடைவில் புண் நீங்கி விடும்.
படை, தேமலுக்கும் இதையே பயன்படுத்த குணம் உண்டாகும்.
வெள்ளை அல்லி பூ மேகம் ஆண்குறி துவார ரணம், நீரிழிவு, தாகம், உடல்சூடு ஆகியவற்றைப் போக்கும்.
செவ்வல்லி சிறுநீர் நன்கு இறங்கும். நீர்ப்பிணி (மூத்திர ரோகங்கள்) மேகப்பிணி (நீரிழிவு) வெப்பத்தால் உண்டாகும் கண்நோய்கள் இரத்த பித்தம், புண் முதலிய பல பிணிகளும் தீரும் மேற்கண்ட பிணிகளுக்குப் பூவைக் கொண்டு வந்து மணப்பாகு செய்தும், கிழங்கைச் சூரணம் செய்தும் தக்க அளவில் கொடுக்கலாம்.
கொடியும், கிழங்கும் வெப்பம் தணிக்கும், தைலங்களில் சேர்க்கலாம். இலையைக் கிலாழமிட்டும் புண்களை கழுவலாம். கிழங்கை கிராம மக்கள் அவித்து உணவாகவே உண்கிறார்கள். இதன் கிழங்கை உட்கொள்வதால் மேக அனல், உள் ரணம், தாகம் ஆகிய வெப்ப ரோகங்கள் தணியும். இதன் பூச்சாற்றாலும் கிழங்கின் சாற்றாலும் கற்பூர சிலாசத்தைப் பற்பமாக செய்து, மேகப் பிணிகளுக்குக் கொடுக்க, மேக அழல், உட்சூடு, திராதாகம் இரத்த பித்தம் முதலியவை நீங்கும்.
நீரிழிவு நோய்
இப்பூவிலிருந்து சர்பத் செய்யப்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய், சிறுநீர்க் கோளாறு, உஷ்ணத்தினால் காணும் கண்நோய் இவை அனைத்தும் குணமாக்க வல்லது. முக்கியமாக நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.