அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை சிறுநீரகங்கள். அவரை விதை வடிவில் சிறிதாக இருக்கும் சிறுநீரகங்களுக்கு, உடல் முழுவதும் ஓடும் மொத்த ரத்தத்தில் 25 சதவீதம் ஓடுகிறது.

உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில் 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது. ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. உடலுக்கு தேவையான நீர்சத்து சம நிலையில் இருக்க உதவுகிறது.

ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. அமில-காரத் தன்மையைக் காக்க உணவுகின்றன. மேலும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குப் சிறுநீரகங்கள் உதவுகின்றன. சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எரித்தோபாய்ட்டின் (Erythopietin) என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பியில் குறையேற்படும் போது, ரத்த சோகை ஏற்படுகிறது.

இவ்வாறு அத்தனை பணிகளையும் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன. அதில் எதாவது வேலை செய்யாமல் மக்கர் செய்ய ஆரம்பிக்கும் போது பிரச்சனைகள் ஆரம்பம் ஆகின்றன.

சிறுநீரகத்தில் ரத்த வடிகட்டிகள்:

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் இரண்டு சிறுநீரகங்களுடன் பிறக்கிறான். அதன் எடை 150 கிரம். 12 செ.மீ நீளம் 5 செ.மீ அகலம் உடையது. சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு முக்கியம். எனெனில் நோய்காரணமாக இவை பாதிக்கப்படும் நிலையில் அதன் அளவு குறையவோ கூடவோ வாய்ப்பு உள்ளது.

உடல், உயிரின் முக்கிய ஆதாரமாக இதயம் உள்ளது போல், சிறு நீரகங்களில் இயல்பான பணியைத் தீர்மானிப்பவை அவற்றில் உள்ள ரத்த வடிகட்டிகள் (Nephorons). ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என இரண்டு சிரகத்திலும் சேர்த்து மொத்தம் 20 லட்சம் வடிகட்டிகள் உள்ளன. இந்த வடிகட்டிகள் சல்லடை போன்றவை. இந்த வடிகட்டிகள் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றி, சுத்தமான ரத்தத்தை மட்டும் உடலுக்குள் மீண்டும் அனுப்புகின்றன. எஞ்சிய கழிவுகள் சிறுநீர்பையில் தேங்கி, அங்கிருந்து சிறுநீராக வெளியறுகிறது. இந்த வடிகட்டிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

இந்தியாவில் சக்கரை நோயின் காரணமாக 30 சதவீதமும், உயர் ரத்த அழுத்தத்தால் 10 சதவீதமும் சிறுநீர்கோளாறுகள் ஏற்படுகின்றது. சிறுநீரகங்கள் முழுவதும் சிறு சிறு ரத்த நாளங்கள் அதிக அளவில் உள்ளன. இயல்பான அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரை நோய் காரணமாக ரத்த நாளங்கள் பழுதடைந்துவிடுகின்றன. நஞ்சுப்பொருள்கள் ரத்தத்தில் அதிக அளவில் கலப்பதால் இத்தகைய நோயாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக உயர் ரத்த அழுத்த நோயானது, சிறுநீரக செயல்பாட்டை குறைப்பதோடு மற்றும் கோளாறுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை அதிகப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம் பார்க்க மறக்காதீர்கள்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோயாளில் எப்பொழுது டாக்டரிடம் சென்றாலும், ரத்த அழுத்த அளவைப் பார்த்துக்கொள்வது அவசியம். அவ்வப்பொழுது ரத்த அழுத்த அளவையும், ரத்தத்தில் சக்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொண்டு டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் என்ன?

ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் எப்பொழுதும் கீழ் கண்ட அறிகுறிகள் வெளிப்பட்டால் உஷார்அடைவது அவசியம்.

பாதத்தில் வீக்கம்.

சுவாசிப்பதில் சிரமம்.

சிறுநீர் கழிக்கும் போது வலி.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் (ஒரு மணி நேரத்துக்குள் இரண்டு முறைக்கு மேல் கழித்தல்).

சிறுநீரகம் உள்ள இடத்துக்கு மேல் (விலாபுரத்தில்) வலி இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரிடம் செல்வது அவசியம்.

கோளறைக் கண்டுப்பிடிக்கும் சிறுநீர், ரத்தப் பரிசோதனை: சிறுநீரில் எப்பொழுதும் கழிவு மட்டும் வெளியேற வேண்டும். உடலுக்குள் செல்ல வேண்டிய புரதச் சத்து சிறுநீரில் வெளியேறவே கூடாது. சிறுநீரக கோளாறு உள்ளவர்களில் 80 சதவீதத்தினருக்கு சிறுநீறுடன் புரதமும் வெளியேறுகிறது. எனவே ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை செய்து சிறுநீரக கோளறு குறித்த சந்தேகத்தை டாக்டர் எளிதாக உறுதி செய்துவிடுவார். குறிப்பாக ரத்த பரிசோதனையின் மூலம் சிறுநீரகங்களில் உள்ள ரத்த வடிகட்டிகளின் செயல் திறனைக் கண்டுப்பிடிக்க முடியும். ரத்த அழுத்த அளவு 120/80 எம்எம் எச்ஜி என்ற இயல்பான அளவுக்கு அதிகமாக இருந்தாலோ , சிறுநீரில் புரதச் சத்து வெளியேறுவதாக தெரிந்தாலோ தொடர் சிகிச்சை அவசியம்.

மலிவு விளையில் மாத்திரைகள்: ரத்த அழுத்தத்தை இயல்பான அளவுக்கு கொண்டுவந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், சக்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் சிறுநீரில் புரதம் வெளியேறுவதைத் தடுக்கவும் மலிவான விலையில் நல்ல மாத்திரைகள் உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் விலை மதிப்பற்ற சிறுநீரகங்கள் செயலிழப்புக்கு உள்ளாவதைத் தடுத்துக் கொள்ள முடியும். டயாலிசிஸ் போன்ற சிகிச்சைக்கு ஆகும் பணமும் மிச்சமாகும்.

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு கல்,  கற்கள், கோளறு , நோய் அறிகுறி ,சிறுநீரகம் மருத்துவ குறிப்பு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...