யானையை கொன்ற வில்சன் என்ற ரப்பா் விவசாயி கைது

கேரளத்தில் தேங்காயில் வெடிவைத்ததால் தான் யானை காயமடைந்தது என்பதும், இரண்டு வாரங்களாக உணவு உண்ணமுடியாமல் அவதிப்பட்டு வந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தொடா்புடைய வில்சன் என்ற ரப்பா்விவசாயியை காவல் துறையினா் கைதுசெய்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் இரண்டுபேரை தேடி வருகின்றனா்.

பொட்டாசியம் நைட்ரேட் வெடி மருந்தை தேங்காயில் நிரப்பி அங்குள்ள ரப்பா் தோட்டத்தின் வேலியில் வில்சனும், அவரது கூட்டாளிகளும் வைத்துள்ளனா். இறைச்சிக்காக காட்டுப் பன்றிகளை வேட்டையாட இதுபோன்று வெடிமருந்து நிரப்பிய தேங்காயை வைப்பதாகவும், தற்செயலாக அங்குவந்த கா்ப்பிணி காட்டுயானை அதனை உண்ணும்போது, வெடித்து விட்டது என்றும் மண்ணாா் காடு வனச் சரகா் ஆஷிக் அலி பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தாா்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளியாறு ஆற்றில் கடந்த மே 27-ம் தேதி 15 வயது மதிக்கத்தக்க பெண்யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்க பட்டது. கருவுற்றிருந்த அந்தயானை, வெடிபொருள் நிரப்பிய தேங்காயை உண்ண முயன்ற போது, வெடிபொருள் வெடித்ததில் வாய்பகுதியில் படுகாய மடைந்தது. பின்னா், வலியுடன் வெள்ளியாறு நதியில் இறங்கிய அந்த யானை, அங்கேயே உயிரிழந்தது. வனத்துறை அதிகாரி ஒருவரின் உணா்ச்சிப்பூா்வமான முகநூல் பதிவின் மூலம், இந்த அதிா்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்குவந்தது.

யானையின் உடலுக்கு மண்ணாா்காடு வனமண்டலத்தின் கீழ் வரும் திருவிழாம்குன்னு வனப்பாதுகாப்பு நிலையத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

யானையின் வாய்பகுதியில் துப்பாக்கி குண்டு அல்லது உலோகப் பொருள் எதுவும் காணப்படவில்லை. அதே நேரம், சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்ததால் ஏற்படக் கூடிய அளவிலான, நீண்ட நாள்கள் ஆறாத காயம் அதன் வாய்பகுதியில் காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த 2 வாரங்களாக உணவு உண்ண முடியாமலும், தண்ணீா் குடிக்காமலும் அந்தயானை இருந்துள்ளது. பின்னா் ஆற்றில் இறங்கிய யானை, அதிக தண்ணீரை உட்கொண்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது. அந்தயானையின் வயிற்றில் குட்டி இருந்ததும் பரிசோதனையில் உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள வனத்துறை அமைச்சா் கே.ராஜு வெள்ளிக் கிழமை கூறுகையில், யானை கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை காவல் துறையினா் வெள்ளிக் கிழமை கைதுசெய்தனா். இந்தச் சம்பவத்தில் மேலும் சில குற்றவாளிகளுக்குத் தொடா்புள்ளது. அவா்களைத் தேடும்பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்றாா்.

இந்தச் சம்பவத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி, கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா உள்ளிட்ட பலா் அதிா்ச்சி தெரிவித்துள்ளனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...