சீன ஆதரவு பிரச்சாரம் கைது

காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்திபரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கில் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லிபோலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: “ஷாங்காயை மையமாகக் கொண்ட நிறுவனத்தை நடத்தி வரும் நெவில்லி ராய் சிங்கம் என்ற தொழிலதிபரும், அவரது நிறுவன பணியாளர்களும், பிரபுர் புர்கயஸ்தாவும் இமெயில்கள் மூலம் தொடர்பில்உள்ளனர்.

காஷ்மீரும் அருணாச்சல பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதிகள் அல்ல; அவை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தியை உருவாக்கி பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல் பட்டிருப்பது அந்த மெயில்கள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இத்தகைய செய்தியை பரப்புவது குறித்து அவர்கள் சதிதிட்டம் தீட்டி இருக்கிறார்கள். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான திட்டமிட்ட சதிசெயல்.

நியூஸ் கிளிக்கின் பங்குதாரரான கௌதம் நவ்லகா, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளை தீவிரமாக ஆதரிப்பது, பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்டான குலாம் நபி ஃபாயுடன் சேர்ந்து தேச விரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், புர்கயஸ்தாவும், அவரதுகூட்டாளிகளும் வெளிநாட்டு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இந்தியாவின் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியா வசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை சீர்குலைக்கவும், சட்டவிரோத வெளிநாட்டு நிதி மூலம் விவசாயிகளின் போராட்டத்தை நீட்டிக்கச்செய்து அதன் மூலம் பொதுசொத்துகளை சேதப்படுத்த சதிசெய்துள்ளனர். கோவிட் 19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை இழிவு படுத்துவதற்காகவும் இவர்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் செயல் முறையை நாசப்படுத்த, ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மைக்கான மக்கள் கூட்டணியுடன் சேர்ந்து புர்கயஸ்தா சதி செய்துள்ளார். சட்ட விரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக வேண்டு மென்றே தவறான செய்திகளை பரப்புவதற்கு புர்கயஸ்தா தனது இணைய தளத்தைப் பயன்படுத்தி உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள், வெளிநாட்டு நிதி என்ற போர்வையில், 115 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம்பெற்றுள்ளனர்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி இருவரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி டெல்லி காவல் துறை மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...