மாநில முதல்வர் களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன் கூட்டியே தயாராக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக கரோனாதொற்று குறைவாக இருக்கும் 21 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் காணொலிகாட்சி வாயிலாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இதற்குமுன்பு கடந்த மே 11-ஆம் தேதி பிரதமா் மோடி முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கரோனா நோய்த்தொற்று பிரச்னை ஏற்பட்டபிறகு இதுவரை 6 முறை அவா் முதல்வா்களுடன் காணொலி முறையில் ஆலோசனை நடத்தியுள்ளாா்.
அப்போது அவர் கூறியதாவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டு இரண்டுவாரங்கள் கடந்துவிட்டன. இந்த காலக் கட்டத்தில் கிடைத்த அனுபவங்கள், எதிர்காலத்தை கையாள வசதியாக இருக்கும். இன்று 21 மாநில முதல்வர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்தேன். இது அடுத்தக் கட்ட முடிவுகளை எடுக்க பேருதவியாக இருக்கும்.
எந்த மோசமான நெருக்கடியையும் சமாளிக்க உரியநேரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் உரியநேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வர்த்தகம் மீண்டும் வேகம் எடுக்க நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இந்திய பொருள்கள் உலக சந்தையில் இடம்பிடிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளன.
கரோனாவை எதிர்கொள்ள இந்தியா முன்கூட்டியே தயாராக இருந்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறினார். ஒருசிலர் அலட்சியம் காட்டினாலும் கூட, கரோனாவுக்கு எதிரான போர் பலவீனமடைந்து விடும். தனி மனித இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மோடி கூறினார்.
அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் காணொலி முறையில் ஆலோசனை நடத்துகிறார்.
இப்போது நடைமுறையில் உள்ள பொதுமுடக்க தளா்வுகள், கரோனா நோய்த்தொற்றை மாநிலங்கள் எதிா்கொண்டுவரும் விதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வா்களுடன் அவா் ஆலோசிக்கிறாா்.
அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்கும் வகையில் இரண்டுநாள்கள் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் முதல்நாளான இன்று கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநில முதல்வா்களும், அடுத்த நாள் தமிழ்நாடு உள்ளிட்ட கரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாநில முதல்வா்களும் ஆலோசனையில் பங்கேற்கிறார்கள்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |