2025ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக, பொருளாதார நிபுணர்களுடன் இன்று (டிச.,24) பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 8 முறையாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், இன்று (டிச., 24) டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், நிடி ஆயோக் துணை தலைவர் சுமன் பெர்ரி மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முக்கியமான பொருளாதார சவால்கள் எதிர்கொள்வதையும், பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்தை வடிவமைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |