தோஹா, கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அல் தானியைச் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
மேற்காசிய நாடான கத்தாருக்கு மூன்று நாள் பயணமாக, கடந்த டிச., 30ம் தேதி சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அந்த நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சராக அல் தானியை நேற்று சந்தித்து பேசினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புத்தாண்டில் என் முதல் பணியாக இந்த சந்திப்பு நடந்தது. இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினோம்’ என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |