நாட்டின் பகுதியைக்காக்க உயர்ந்தபட்ச உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளுக்காக நாடு எப்போதும் கடன் பட்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய தீரம் தாய் நாட்டின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று அமித்ஷா மேலும் தெரிவித்தார்
கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டையில் 20 ராணுவவீரர்கள் வீரமரணம் எய்தினர். இதனையடுத்து தொடர் ட்வீட்களில் அமித்ஷா, தைரியமான வீரர்களை இழக்கும்வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதது என்று வேதனை தெரிவித்தார்.
“இந்தியா எப்போதும் அவர்களது உயர்ந்த உயிர்த்தியாகத்துக்கு கடன்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் மோடி அரசும் இந்தத்துயரம் தோய்ந்த தருணத்தில் அவர்களது குடும்பத்துடன் இணைந்து நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குண மடைய பிரார்த்திக்கிறோம்.
இந்தியா தன் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பு உணர்வை அவர்களதுதைரியம் பிரதிபலிக்கிறது. இந்திய ராணுவத்துக்கு அத்தகைய தைரிய நாயகர்களை அளித்த குடும்பத்தினருக்கு தலை வணங்குகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும் ராணுவவீரர்களின் தியாகம் வீண்போகாது, இந்தியா அமைதியை விரும்புகிறது ஆனால் தொடர்ந்து தூண்டினால் தக்கப் பதிலடிகொடுக்கவும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |