சீனாவுடனான எல்லை விவகாரத்தை கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி மீது அதீத நம்பிக்கை

சீன ராணுவம் கடந்த 15ம்தேதி இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின்மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், சீனராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும், சீனதரப்பில் அதிகார பூர்வ தகவல்கள் வெளியிடப் படாமல் இருந்த நிலையில், சம்பவம் நடந்த ஒருவாரத்திற்கு பிறகு, 2 ராணுவ உயரதிகாரிகள் தங்கள்தரப்பில் உயிரிழந்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனாலும் மொத்தமாக எத்தனை சீன ராணுவவீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுடன் மேலும் மோதலை விரும்பவில்லை எனபம்மியது. ஆனால் அதேவேளையில், இந்தியாவின் குரல் வலுத்து ஒலித்தது. இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான். ஆனாலும், இந்தியா அதன் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்காக, எதையும்செய்யும் என்று கெத்தான தொனியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

சீனாவின் அத்துமீறலையடுத்து, சீனாவுடனான ராணுவரீதியான மற்றும் வர்த்தக ரீதியான அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியுள்ளது இந்திய அரசாங்கம். சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடிகொடுப்பதற்கு முழுசுதந்திரமும், களச்சூழலின் அடிப்படையில், சுயமாக முடிவெடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல சீனாவுடனான வர்த்தகத்திலும் கண்டிப்புகாட்ட தொடங்கியுள்ள இந்தியா, சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்க தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கும்வகையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற பொருட்களை தடைசெய்யும் நோக்கில், சீன பொருட்களின் தரத்தை ஆராயுமாறு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, சீன மற்றும் இந்திய(உள்நாட்டு உற்பத்தி) பொருட்களுக்கு இடையேயான விலை வித்தியாசத்தை ஆராயுமாறும் உத்தர விட்டுள்ளது. தரம் குறைந்த சீன பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து, அதன்மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த முடிவுசெய்துள்ளது.

இவ்வாறு சீனாவுடனான விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு, திடமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சியான காங்கிரஸும், ராகுல் காந்தியும், சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததா என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு, இல்லை என்ற பதிலை இந்திய அரசாங்கம் தரப்பில் அளித்தபிறகும், இந்த விவகாரத்தையும் வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்துவருகிறது.

இந்நிலையில், சீனாவுடனான விவகாரத்தை பிரதமர் மோடியின், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கையாண்டவிதம் மற்றும் தேசபாதுகாப்பில் பிரதமர் மோடியின் மீதான மக்களின் நம்பிக்கை குறித்த CVoter சர்வேயில், இந்திய மக்கள், பிரதமர் மோடியின்மீது அபார நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அந்த சர்வேயில், இந்தியாவிற்கு எல்லை விவகாரத்தில் சீனாதான் பெரும் கவலையளிப்பதாகவும் சவாலாக திகழ்வதாகவும் 68% மக்களும் பாகிஸ்தான் என 32% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 73.6% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 16.7% மக்கள் மட்டுமே எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர். 9.6% மக்கள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் என இரு தரப்பையும் நம்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வேயின் படி, 61% மக்கள் ராகுல் காந்தியின் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் அரசின் வெளியுறவு கொள்கை மீதும், ராஜாந்திர ரீதியான உறவை பலப்படுத்துவதில் தோற்று விட்டதாகவும், அதனால் காங்கிரஸ் மீதும் ராகுல்காந்தி மீதும் நம்பிக்கையில்லை என்று 61% மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேச பாதுகாப்பில் 72.6% இந்தியர்கள் பிரதமர் மோடியின்மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 14.4% பேர் மட்டுமே ராகுல் காந்தியை நம்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

சீன பொருட்களை புறக்கணிப்பது குறித்த சர்வேயில், 68% இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிப்பதாகவும் 31% பேர் சீன பொருட்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...