சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவிவரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மின் சாதனங்கள் இனி இறக்குமதி செய்யப் படாது என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்கே.சிங் கூறினாா்.
இது தொடா்பாக மாநில மின்துறை அமைச்சா்களுடன் வெள்ளிக் கிழமை காணொலி வழியில் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதன இறக்குமதிக்கு இனி அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, மாநிலமின் விநியோக நிறுவனங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை அளிக்க வேண்டாம்.
சீனாவிலிருந்து மட்டும் ரூ. 21,000 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள் உள்பட மொத்தம் ரூ. 71,000 கோடி மதிப்பிலான மின்சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. நமது நாட்டின் எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் ஒருநாட்டிடமிருந்து இந்த அளவு மின்சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து நாம் இனி எதையுமே வாங்கக்கூடாது.
நமக்குத் தேவையான பொருள்களை நாம் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யலாம். மின் கோபுரங்கள், மின்தொடா்பு சாதனங்கள், மின் மாற்றிகள், மின்மீட்டா் பாகங்கள் என பல்வேறு மின் சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. இந்த உபகரணங்களை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு மாநில மின்பகிா்மான நிறுவனங்கள் இனி உத்தரவுகளை கொடுக்க வேண்டாம். மத்திய அரசின் சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் தேவையான மின் சாதனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். சீனாவிலிருந்து இறக்குமதிசெய்ய அனுமதிக்கப் படமாட்டாது. இது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதிக்கான தடை நடைமுறை படுத்தப்படும்.
மாநில மின்வாரியங்களின கடன்களை சீரமைப்பதற்காகவும், இழப்பை குறைப்பதற்காகவும் உதய், டிடியுஜிஜேஒய், ஐபிடிஎஸ் போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதியதிட்டங்களின் கீழ், மத்திய அரசு எந்தவித நிதியையும் கடனாகவோ அல்லது மானியமாகவோ மின்நிறுவனங்களுக்கு வழங்காது. மாறாக, இந்த திட்டங்களின் மூலம் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்கவேண்டும். மேலும், சிறப்பு தொகுப்பு திட்டத்தின்கீழ் மாநிலங்கள் ரூ. 93,000 கோடி கடன்களை கேட்டுள்ளன. இதுவரை ரூ. 20,000 கோடி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |