முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

 வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் கொண்டு கபம் சம்பந்தமான நோய்களுக்கு – குறிப்பாக ஆஷ்துமாவைக் குணப்படுத்த மருந்தைத் தேடி அலைய வேண்டாம். 'இளைப்பு இருமல்' என்று கூறப்படும் ஆஸ்துமாவை அடியோடு வேரறுக்க முசுமுசுக்கை, ஆடாதோடை போன்றவை நல்ல மருந்தாகும்.

இந்த இலைகளைப் பறித்து வந்து, இதனுடன் புதினா இலை, உளுந்து, கறிவேப்பிலை, இஞ்சி இவை சேர்த்து அரைத்த துவையலை வாரத்திற்கு மூன்று தினங்கள் முதல் சோற்றில் இட்டுச் சிறிது நல்லெண்ணையும் விட்டுச் சாப்பிட்டு வந்தால் கபத் தொல்லைகளை குறிப்பாக ஆஸ்துமாவை வேரறுக்கலாம்.

பெரும் சுவாசக் குழல், மற்றும் கிளை சுவாசக் குழல்கள், சுவாசப் பையின் நுண்ணறைகள் இங்கெல்லாம் ஏற்படுகின்ற அழற்சியைப் போக்க முசுமுசுக்கை பெரிதும் உதுவுகிறது. மேலும், சுவாசப்பைகளில் தேங்கிடும் கோழையை அகற்றித் துப்புரவு செய்வதில் இதற்கு இணை வேறு இல்லை எனலாம். நுரையீரல்களில் உண்டாகும் எந்த நோயையும் இது குணப்படுத்த வல்லதாகும்.

முசுமுசுக்கை வேர் ஏறக்குறைய 100 கிராம், ஆடாதோடை வேர் 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் காய வைத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஒவ்வொரு வேளைக்கும் இட்டுக் கொதிக்க வைத்துக் காலையிலும் மாலையிலும் குடித்து வர நாள்பட்ட சளியைக் கரைக்கலாம். காசநோயையும் குணப்படுத்தலாம்.

முசுமுசுக்கை தைலம் கண் எரிச்சல், உடற்சூடு இவைகளைத் தணிப்பதாகும். முசுமுசுக்கை இலைகளைக் கொண்டு வந்து இடித்து சாறெடுத்து அதே அளவு நல்லெண்ணையும், அதே அளவு பசும்பாலும் சேர்த்துக் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அனைவரும் தேய்த்துப் பலன் பெறலாம்.

One response to “முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொழில் முனைவோர்களுக்கு வாக்கு ...

தொழில் முனைவோர்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை இதனை அடுத்து, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 29 ...

இந்தியாவுடன் நல்ல உறவு -ட்ரம்ப் ...

இந்தியாவுடன் நல்ல உறவு -ட்ரம்ப் பெருமிதம் இந்தியா உடன் நல்ல உறவு உள்ளது. பிப்ரவரியில் பிரதமர் ...

மஹா கும்பமேளாவில் புனித நீராடி ...

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித்ஷா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி – மோடி மற்றும் ட்ரம்ப் உரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கா ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம் 'இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம்பவம் – அனைவருக்கும் எடுத்துக்காட்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...