(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்

பாகிஸ்தான் நள்ளிரவு நடத்திய ஆளில்லா ஏவுகணை தாக்குதலை முறியடித்தது, இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ‘எஸ்.400’ சுதர்சன சக்கரம்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க, கடவுள் மஹா விஷ்ணு கையில் சுதர்சன சக்கரம், எப்போதும் இருக்கும். மஹாபாரதத்தில் மஹாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்துள்ளார். அதேபோல், நமது பாரத நாட்டின் பாதுகாப்புக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது எஸ்.400 எனும், ஏவுகணை எதிர்ப்பு சாதனம்.

நேற்று முன்தினம் அதிகாலை, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது இலக்குகளை, ‘ஆபரேஷன் சிந்துார்’ நடவடிக்கை வாயிலாக, இந்தியா தரைமட்டமாக்கியது. 100 பயங்கரவாதிகள் வரை அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல ராணுவ இலக்குகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, பாகிஸ்தான் தாக்க முயன்றது. குறிப்பாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லுாதியானா, புஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது.

ஆனால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, எஸ்.-400 எனும் இந்த பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் ஏவுகணைகளை வானத்தில் இடைமறித்து அழித்தது. இந்த ஏவுகணை எதிர்ப்பு சாதனம், உலகின் மிகவும் அதிநவீன நீண்ட தொலைவு வான்பாதுகாப்பு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய விமானப்படையின், கட்டளை (கமாண்ட்) மற்றும் கட்டுப்பாட்டு (கன்ட்ரோல்) வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எஸ். -400 பாதுகாப்பு அமைப்பும், தலா இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஆறு லாஞ்சர்கள், மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கொண்டுள்ளன. ஒரு பேட்டரியால், 128 ஏவுகணைகள் வரை இயக்க முடியும்.

நமது நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து ஐந்து, எஸ். 400 வான்பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்துள்ளோம். இதில், மூன்று தற்போது செயல்பாட்டில் உள்ளன. இன்னும் இரண்டு ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள், அடுத்த ஆண்டு, நமது ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும். ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பெரும் ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்துவதில், எஸ்.400க்கு பெரும் பங்கு உண்டு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...